உடல்நலம் காக்க அன்றாடம் ஒரு சாறு

திங்கட்கிழமை
☕வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைத்துக்
குடித்தால் நாக்கு தூய்மையாகும் ; கபம் நீங்கும்.

செவ்வாய்க்கிழமை
☕ கடுக்காய்ப் பொடியும் பனங்கற்கண்டும் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும்.

அறிவன் (புதன் )கிழமை
☕ தூதுவளை, கர்ப்பூரவல்லி, துளசி மூன்றையும் சமஅளவு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது. சளி இளகி மலத்துடன் வெளியேறிவிடும்.

வியாழக்கிழமை
☕ சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்துப் பொடிசெய்து , ஒரு தேக்கரண்டி போட்டுப் பனங்கற்கண்டுடன் கொதிக்க வைக்கவேண்டும். வடிகட்டிக் குடித்தால் செரிமானம் ஆகும், வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும்.

வெள்ளிக்கிழமை
☕வெந்தயம், கொத்துமல்லி சமஅளவு சேர்த்து வறுத்துப் பொடிசெய்து , ஒரு தேக்கரண்டி போட்டுப் பனங்கற்கண்டும் உப்பும் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.

காரி (சனி )க்கிழமை
☕ முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் , உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்புச் சத்து கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை
☕சுக்கு மல்லிச் சாறு (காப்பி) குடிக்கலாம்.

  • சூலூர் பாவேந்தர் பேரவை


Plastics

In the desert outside Dubai, piles of sun-bleached bones dot the landscape. These are the remains of Arabian camels that once roamed the dunes. But they’re not just bones. Beneath a layer of windswept sand lies something truly alarming.

In hundreds of these hollowed out ribcages, researchers at 5 Gyres have found enormous tangles of plastic. Made up of plastic bags and polypropylene rope, the masses vary in size — some as small as a basketball and others as big as a large suitcase. Each one has caused a camel’s death, by way of gut blockages, bacterial sepsis, dehydration, or malnutrition.

It’s heartbreaking, but what’s happening to camels is not unique.

In the desert, food sources are limited. To a camel’s eye, if it’s not sand, it’s food. As a result, masses called bezoars naturally form in camels’ guts, made up of indigestible matter like hair or plant fibers. But when synthetic material enters the digestive tract, like a plastic bag clinging to the branches of an acacia tree, the masses turn deadly. Researchers have dubbed these “polybezoars,” and dissection reveals that they’re made up of thousands of individual bags.

In 5 Gyres’ recent study, polybezoars led to a regional camel mortality rate of 1%. The news has caused heightened concern in the Middle East, where camels have proven essential to a traditional nomadic lifestyle. In fact, the study’s findings have prompted the government of the United Arab Emirates — a country whose economy is dominated by oil and petroleum, the building blocks of plastic — to signal its strong support for a global plastic treaty.

Now is the time to build on this momentum.



மதமற்ற குழந்தை வளர்ப்பு

மதமற்ற குழந்தை வளர்ப்பே சிறந்தது… சமீபத்திய ஆய்வு முடிவுகள்.

கடவுளுக்குப் பயப்படும் தாயாக இருப்பதுதான் பிள்ளை வளர்ப்புக்கு நல்லது என்று நம்பிய காலங்கள் போய்விட்டன என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வுகள் காட்டுகின்றன. இதுபற்றி, “லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்சில்” ஒரு கட்டுரை வந்திருந்தது. How Secular Family Values Stack up என்ற தலைப்பில், ஃபில் ஜுகர்மேன் ((Phil Zuckerman) என்பவர் அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். இவர் சமூக இயல் துறை யில் பேராசிரியராக அமெரிக்காவின் Pitzer கல்லூரியில் பணியாற்றுகிறார். பல நூல்களையும் எழுதியுள்ளார்.

2010இல் டியூக் பல்கலைக்கழகம் ஆய்வொன்றை மேற்கொண்டது. கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளர்க்கப்படும் குழந்தைகள் இனவெறிக்கு ஆளாவதில்லை. சக மாணவர்களின் தீய பழக்கங்களால் கெட்டுப் போவதில்லை. மனதில் வஞ்சம் வைப்பதில்லை. தேசிய வெறிக்கு ஆட்படுவ தில்லை. போர் வெறியர்களாக இருக்கமாட்டார்கள். அதிகாரத்துவப் போக்கு அவர்களிடம் வராது. சகிப்புத் தன்மை உள்ளவர்களாக இருப்பார்கள் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. கடவுள் நம்பிக்கையோடு வளர்க்கப்படும் குழந்தைகளைக் காட்டிலும் நம்பிக்கையில்லாதவர்களாக வளர்க்கப் படும் குழந்தைகள் பல அம்சங்களிலும் சிறந்தவர்கள் ஆகிறார்கள் என்ற ஆய்வு முடிவுகள் பழைய நம்பிக்கைகளைத் தகர்ப்பனவாக உள்ளன.

Pew Research யின் முடிவுகள் மதமற்றவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் வளர்ந்து வருவதைக் காட்டுகிறது. (http://www.pewforum.org/2012/10/09/nones-on-the-rise/

தற்போது அமெரிக்காவில் மதமற்றவர்களின் எண்ணிக்கை 23 விழுக்காடாக உயர்ந் திருக்கிறது. 1950களில் அமெரிக்காவில் மதமில்லாதவர்களின் எண்ணிக்கை வெறும் 4 விழுக்காடு மட்டுமே. கடவுள் இல்லை என்ற போக்கு அதிகரித்து வருவதால், மதமில்லாதவகையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எப்படி வளர்க்கப்படுகிறார்கள் என்பதுபற்றி ஆய்வாளர்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.

ஜுகர்மேன் சொல்வதைக் கேளுங்கள் : மதம் அளிக்கின்ற பாதுகாப்பும் தர்ம சிந்தனையும் இல்லை யென்றால் செயலற்றவர்களாக, நம்பிக்கையிழந்தவர்களாக, நோக்கமற்றுத் திரிபவர்களாக ஆகிப்போவார்கள் என்று கருதப்படுகிறது. ஆனால் அது அப்படி இல்லை. மதமற்ற குடும்பங்கள் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த அடித்தளத்தை உருவாக்கித் தருகிறார்கள். இதனைப் பேராசிரியர் வார்ன் பெங்ஸ்டன் (Vem Bengston) உறுதி செய்கிறார். வார்ன் பெங்ஸ்டன் பல தலை முறைகளின் மாற்றம் பற்றிய நீண்டகால ஆய்வினை மேற்பார்வை செய்பவராவார். இந்த ஆய்வுதான் அமெரிக்கத் தலைமுறைகள் பற்றிய மிகப் பெரிய ஆய்வாகும். மத நம்பிக்கையற்ற குடும்பங்களின் எண் ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்து வருவதைக் கண்ட பெங்ஸ்டன், 2013இல் மதச்சார்பற்ற குடும்பங்கள் என்ற அம்சத்தை யும் ஆய்வில் இணைத்தார்.

“மத நம்பிக்கையுள்ள பெற்றோர்களைக்காட்டிலும் மத நம்பிக்கையில்லாத பெற்றோர்கள் தங்களின் நேர்மை-தர்மம் பற்றிய கொள்கையில் இழை பிசகாதவர்களாக இருக்கிறார் கள்” என்று பென்ஸ்டன், ஜுகர்மேனிடம் தெரிவித் தார். “மதச்சார்பற்ற குடும்பங்களின் பெரும் பகுதியினர் ஒரு நோக்கத்துடன் கூடிய வாழ்க்கையை நடத்து கின்றனர். அவர்களின் இலக்குகள் தெளிவாக இருக்கின்றன. அவர்கள் நன்னெறி உணர்வுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்” என்றும் அவர் சொன்னார்.

மதநம்பிக்கையற்றவர்களுக்கு நன்னெறி என்பது மிகவும் எளிய கோட்பாடு. மற்றவர்களைப் புரிந்துகொண்டு அதற்கு இணங்க செயல்படு என்பதுதான் அந்தக் கோட்பாடு. மற்றவர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக் கிறாயோ, அதனையே நீ அவர்களுக்குச் செய் என்பது எல்லாக் காலத்துக்குமான கோட்பாடாகும். அதற்கு அதீதச் சக்தி ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கை தேவையானதாக இல்லை.

அப்புறம் மற்றொரு ஆச்சரியமான செய்தியைக் கேளுங்கள். “அமெரிக்கச் சிறைகளில் உள்ளவர்களில் நாத்திகர்கள் அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண் டும். 1990களுக்குப் பின்னர் சிறைப்பட்ட நாத்திகர்கள் அநேகமாக இல்லை” என்று அமெரிக்க மத்திய அரசின் சிறைத்துறை தெரிவிக்கிறது.

இதே விஷயத்தைத்தான், கடந்த ஒரு நூற்றாண்டுக் குற்றவியல் ஆவணங்களும் காட்டுகின்றன என்று, ஜுகர்மேன் சொல்கிறார். “எந்த மதத்தையும் சாராத வர்கள் அல்லது மதத்தொடர்பு இல்லாதவர்கள் குற்றம் செய்தவர்களின் பட்டியலில் மிகக் குறைவாகத்தான் காணப்படுகிறார்கள்” என்றார் அவர்.

கூடுதல் செய்தியொன்று! மத நம்பிக்கையற்ற குழந்தைகள், மத நம்பிக்கையுள்ள குழந்தைகளைக் காட்டிலும் சிறப்பாகக் கற்பனையையும் புனைகதை களையும் யதார்த்தத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க் கிறார்கள் என்று, கடந்தஆண்டு பி.பி.சி. (B.B.C..) வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது. இதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஆய்வின் இணைப்பையும் அளித்துள்ளது.. http://www.bu.edu/learninglab/files/2012/05/corriveau-chen-harris-in-press.pdf ஆய்வை நடத்தியது போஸ்டன் பல்கலைக்கழகம் ஆகும்.

ஆய்வின்போது கற்பனைக் கதைகளை அனைத்து மாணவர்களையும் படிக்க வைத்தனர். பின்னர், விசாரித்த போது மதநம்பிக்கையுள்ளவர்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகள் அந்தக் கற்பனைகள் அனைத்தும் உண்மை என்று நம்பினர். ஆனால், மதம் சாராதவர்கள் வளர்த்த குழந்தைகள் இவையெல்லாம் கற்பனை என்று தெளிவாகச் சொன்னார்கள்.

மதச்சார்புள்ளவர்களின் குழந்தைகள்ஏன் கற்பனைக் கதைகளை யதார்த்தம் என்று குழப்பிக் கொள்கிறார்கள். ஏனென்றால், குழந்தைகளின் ஆய்வு உணர்வை மதம் குழப்பிவிடுவதால் அவர்களால் கற்பனையையும் யதார்த்தத்தையும் பிரித்தறிய முடியவில்லை. குழந்தைகளை சுயமாக சிந்திக்கவிடுங்கள்.

(கோவை ஞானி இலக்கியப் பேரவையைச் சேர்ந்த ஒரு நண்பரின் இன்றைய வாட்சப் பதிவிலிருந்து.)


பொங்கல், ‍தைப் புத்தாண்டு வாழ்த்துகள்

இந்தப் பொங்கல் நன்னாள், பல ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள், உருவம் அருவம் என்ற பேதமற்று ஆதவனை வழிபடும் நன்னாள்,

உலகத்தில் உள்ள அனைவருக்கும், இன பேதமற்று, சாதி பேதமற்று, மத பேதமற்று, எல்லாரும், நல்லவரும் பொல்லாதவரும் அனைவரும் சிறப்புற்று வாழுகின்ற பொலிவுறும் ஆண்டாக இது மலர வேண்டும் என்னும் என் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகிறேன்.

நல்லவரும் தீயவரும் மாக்களும் மனிதர்களும் விலங்குகளும் பூச்சிபுழுக்களும் தாவரங்களும் கண்ணுக்குப் புலப்படாச் சிற்றுயிர்களும்- அனைத்தும் நல்லவிதமாக வாழவேண்டும்.

அததற்கு, உயிருள்ளதற்கும் இல்லாததற்கும்கூட – ஒரு பணி இயற்கையில் இருக்கிறது. அதனதன் பணியை அதுஅது ஆற்றவேண்டும்.

ஆனால் எல்லையற்றதாகிய – இன்ஃபினிடி யாகிய இயற்கையே, ஒரே ஒரு வேண்டுகோள்.

நல்லவர்கள் தலைவர்களாகட்டும். நாட்டை ஆள்வோராகட்டும். அவரவர்க்கேற்ற அறிவுப் பதவிகளில் அமரட்டும்.

தீயவர்கள் அவரவர் தகுதிக்கேற்ப கீழ்நிலையிலே இருக்கட்டும்.

அப்போதுதான் இயற்கையாகிய நீ உய்வாய், பூமி வாழும், மக்கள் வாழ்வார்கள். இல்லையேல் மக்களுக்கு முன்னாலேயே இந்தத் தாயகமாகிய எங்கள் பூமியும் பல்வேறு வித இயற்கைச் சூழல் மாசுபாடுகளால் அழிந்து போகும்.

உலகில் எந்தப் பிராணியும் தனக்குள் சண்டையிட்டுத் தன்னையே அழித்துக் கொள்வதில்லை, தான் வாழும் இயற்கையையும் அழிப்பதில்லை. மனிதன் மட்டும் ஏனோ அவ்விதம் செய்கின்ற கேடான பிராணியாக உருவெடுத்துவிட்டான். இம்மனிதர்க ளிடமிருந்து எங்களைக் காப்பாற்று இயற்கையே…


நாமும் பார்ப்பனர்களும்

பூர்வகுடி இந்தியர்களாக உங்களைக் கருதிக் கொள்பவர்களே, பார்ப்பனர் அல்லாதவர்களே, சிந்தியுங்கள்..

இன்னும் எத்தனை ஆண்டுகள் பார்ப்பனர்களைக் குறை சொல்லியே வாழப் போகிறோம்? இந்த நோக்குமுறை போதாது.

நாட்டில் வெறும் மூன்றுசதவீதமே உள்ள பார்ப்பனர்களை ஏன் எதிர்க்க வேண்டும்?

உண்மையில் தவறு யார் மீது என்று கேட்டால் பிரித்தாளும் சூழ்ச்சி , மந்திரம், தந்திரம் என்று சொல்லுகிறோம்…இதில் உண்மை இருக்கிறது. என்றாலும்,

அவர்களது சுயநல வாழ்க்கை, சமூக நோக்கம் அறவே இன்மை குறித்த சில விஷயங்களை கவனியுங்கள். அவற்றில் நல்லவற்றை (உதாரணமாக மது அருந்தாமை போன்றவை) நாம் பயன்படுத்த வேண்டும்.

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது 1000 ரூபாய், வேண்டாம்… ஒரு நூறு ரூபாய் டிக்கெட் எடுத்து எந்த சினிமா தியேட்டரிலாவது படம் பார்த்ததுண்டா ?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைத்து, அந்த நடிகரின் படங்களுக்கு பாலபிஷேகம், கட்அவுட், சுவர் விளம்பரங்கள், போஸ்டர் ஒட்டுதல் போன்ற கண்றாவிகளை செய்து தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து பார்த்திருக்கிறோமா ?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம், தெரு மின்விளகு, இலவச மனைப் பட்டா, இலவச வீடுகள் கேட்டு எந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்போ, வட்டாட்சியர் அலுவலகம் முன்போ போராடியதைப் பார்த்திருக்கிறோமா ?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது சொந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு ஒயின் ஷாப்பில் பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானம் குடித்து அவர்கள் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்ததைப் பார்த்திருக்கிறோமா ?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது அவர்களுக்குச் சம்பந்தம் இல்லாத எந்தக் கட்சியிலாவது கூட்டாகச் சேர்ந்து மக்களுக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி , சாலை மறியல், ரயில் மறியல், அரசு அலுவலகங்கள் முன் முற்றுகை, சிறை போன்றவற்றைச் சந்தித்ததை பார்த்திருக்கிறோமா ?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது, தேர்தல் நேரங்களில் எந்தக் கட்சியாவது ஓட்டுக்கு பணம் கொடுக்காதா என்று வீட்டு லைட்டை ஆஃப் செய்துவிட்டு, வீட்டு வாசலில் இரவு முழுவதும் கண் விழித்துக் காத்திருக்கும் அவலத்தை பார்த்திருக்கிறோமா ?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது அரசு அலுவலகங்களிலோ , தனியார் நிறுவனங்களிளோ கடை நிலை ஊழியர்களாக பணி செய்வதைப் பார்த்திருக்கிறோமா?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது, உடலுழைப்பு செய்தோ, விவசாயம் செய்தோ, சாக்கடை அள்ளும் வேலையிலோ, துப்புரவு பணிகளிளோ, இயற்க்கை பேரிடர் காலங்களில் நிவாரண பணிகளிளோ ஈடுபட்டதை பார்த்திருக்கிறோமா?

ஃ எந்தப் பார்ப்பனக் கூட்டமாவது சொந்தப் பணத்தைப் போட்டு கோயில் கட்டி, கூழ் ஊற்றி, முதுகில் அலகு குத்தித் தேர் இழுத்தோ, காவடி எடுத்தோ, வேலை தாடையில் மற்றும் உடல் முழுவதும் குத்திக்கொண்டோ, காலில் ஆணி செருப்பு போட்டுக்கொண்டோ, சாமி வந்து மிரண்டோ பார்த்திருக்கிறோமா ?

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்,

மேற்கண்ட எதுவுமே செய்யாத 3 சதவீத பிராமண மக்களுக்கு எல்லாம், குறிப்பாக எல்லா உயர் அதிகாரி வேலைகளும் எப்படி கிடைக்கின்றன?

நாட்டில் 97 சதவீதம் BC மக்களான SC /ST, MBC/OBC Religious minorities, போன்ற சாதி முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டும் ஏன் இன்னும் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதிகளான குடிநீர், மருத்துவம், இலவச மனை பட்டா, தெருவிளக்கு, சாலைவசதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அலைந்து, திரிந்து காத்துக்கிடக்கிறோம்?

உண்மையில் 3 சதவீத பார்ப்பனர்கள் 97 சதவீத நாட்டின் பெரும்பான்மை மக்களான SC /ST, MBC/OBC மக்களை ஏமாற்றி அதிகாரத்தில் இருக்கிறார்களா?

இதில் பெருமளவு உண்மை யிருக்கிறது. அவர்கள் தங்கள் புராணங்களால், கட்டுக்கதைகளால் நம்மை இன்றுவரை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான் மனுநீதி போன்ற வற்றை அழிக்கச் சொல்லுகிறோம். அவர்கள் ஏமாற்றுவதை நாம் மறுக்கும்போது அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் நீதித்துறை, அதிகாரங்கள், பதவிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி நம்மை அழிக்கிறார்கள். இருந்தாலும், பெருமளவில்

97 சதவீத நாட்டின் பெரும்பான்மை மக்களான நாம் வெறும் 3 சதவீத பார்ப்பனர்களிடம் ஏமாந்து போகிறோம் என்பதிலும் உண்மை இருக்கிறது.

காலணாவுக்குப் பொறாத பூணூல் கும்பலுக்கு , அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான அனைத்தையும் நாம் தான் அவர்களுக்கு கொடுக்கிறோம்…

கல்யாணம் தொடங்கி கருமாதி , நினைவு நாள் போன்ற வீட்டில் நடக்கும் அத்தனை சுக துக்க நிகழ்வுகளுக்கும் பிராமணர்களை வரவழைத்து வேட்டி, துண்டு உட்பட, பச்சரிசி, பழம், தேங்காய், நெய் போன்ற பொருட்களை கொடுத்து தட்சணையாக 2000, 3000 கொடுத்து “போய்ட்டு வாங்க சாமி” என்று அனுப்புவது நாம்தான்,

அரசியல் அதிகாரம், நிர்வாக அதிகாரம், சினிமா, விளையாட்டு, பத்திரிகைகள், ஊடகங்கள் இவைகளில் கோலோச்சுவது பார்ப்பனர்களே, ஆனால் இவை அனைத்திற்கும் பணத்தை மட்டுமே விரயம் செய்துகொண்டிருக்கும் கூட்டம் வேறு யாருமல்ல நாம்தான்,

சினிமா, ஊடகம், பத்திரிகைகள், விளையாட்டை நாம் புறக்கணித்து விட்டாலே ஒன்று முதல் ஒன்றரை சதவீத பார்ப்பனக் கூட்டம் துண்டை தலையில் போட்டுக்கொள்வார்கள்.

(BC, SC /ST, MBC/ OBC மற்றும் மதச் சிறுபான்மையினர்)-பொது மக்கள் தங்கள் புத்தியை தீட்டி அரசியல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்…

இதற்குத் தடையாக இருக்கும் சாதிய, மத, இன, மொழி வாதப் பிரிவினைகளை விதைக்கும் பார்ப்பனியச் சனாதனத்தைத் (Brahminism) தூக்கி எறிந்துவிட்டு

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற ஜனநாயக( Democracy) ஒற்றை முழக்கத்தோடு நாம் யாவரும் ஓரணியில் திரண்டு விட்டால்..

மீதி 1-1 1/2 சதவீத பார்ப்பனக் கூட்டத்தின், கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களின் சாதிய ஏற்றத்தாழ்வு அடிமை முறைக்கு முடிவுகட்டமுடியும்..

இதையெல்லாம் விட்டுவிட்டு ..
சுய சாதிப் பெருமை, மதவாதப் பிரச்சினைகள், நான் பெரியவன், நீ பெரியவன் என்று பார்ப்பனிய-சாதிய அடிமைச் சிந்தனையோடு நமக்குள்ளே அரைவேக்காட்டுத் தனமாகச் சண்டை போட்டுக் கொண்டு , ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக்கொண்டு செத்து போவோமானால்,

அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் தற்போது 3 சதவீதமாக உள்ள பிராமணர்கள் மட்டுமே உயிரோடு இருப்பார்கள்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில், ஏமாற்றும் கும்பலும் இருந்து கொண்டே இருக்கும்…

மாறவேண்டியது நாம்தானே அன்றி, பார்ப்பனர்களோடு வீண் போராட்டம் வேண்டாம்.

முதலில் நம்மை நாம் மாற்றிக்கொள்வோம், “நம்முடைய அனைத்து துன்பப் பூட்டுகளுக்கும் “ஆட்சி அதிகாரமே திறவு கோல்”.

ஆட்சியை மாற்றி ஆட்சியாளராக மாறுவதே நம்முடைய இலக்கு…
எதிர்த்து அழித்து ஒழிக்க வேண்டியது பார்ப்பனர்களை அல்ல…

பார்ப்பனியத்தைத்தான்.

பார்ப்பனியக் கொள்கைகளான சாதி மதத்தைத் தாங்கி வாழும் பார்ப்பனியர்களாக இருந்து நம்மால் ஒரு போதும் அதைச்செய்ய முடியாது.

நாம் பார்ப்பனியத்திலிருந்து விடுபட வேண்டும்.

அப்போது தான் இந்தியாவும், இந்தியர்களும், உயர்வடைவார்கள்.


நாட்டைக் கெடுப்பவர்கள்

இதோ நாட்டை வீழ்த்தியவர்கள் விவரம்!

(டெல்லியினை அடிப்படையாகக் கொண்ட ‘யங் இந்தியா’ எனப்படும் நிறுவனம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் கிடைக்கிறது இத்தகவல் )

ஃ ஜனாதிபதி செயலகத்தின் மொத்தப் பதவிகள் – 49.
பிராமணர்கள் – 39,
SC/ST – 4,
OBC – 06.

ஃ துணை ஜனாதிபதி செயலகப் பதவிகள் – 7.
பிராமணர்கள் – 7,
SC/ST – 00,
OBC – 00.

ஃ கேபினட் செயலாளர் பதவிகள் – 20.
பிராமணர்கள் – 17,
SC/ST – 01,
OBC – 02.

ஃ பிரதமரின் அலுவலகத்தில்
மொத்த பதவிகள் – 35.
பிராமணர்கள் -31,
SC/ST – 02,
OBC – 02

ஃ விவசாயத் திணைக்களத்தின்
மொத்த பதவிகள் – 274.
பிராமணர்கள் – 259,
SC/ST – 05,
OBC – 10.

ஃ பாதுகாப்பு அமைச்சக பதவிகள் – 1379.
பிராமணர்கள் – 1300,
SC/ST – 48,
OBC – 31.

ஃ சமூக நல & சுகாதார அமைச்சகத்தின் மொத்த பதவிகள் – 209.
பிராமணர்கள் – 132,
SC/ST – 17,
OBC – 60.

ஃ நிதி அமைச்சகத்தின் மொத்தப் பதவிகள் – 1008.
பிராமணர்கள் – 942,
SC/ST – 20,
OBC – 46.

ஃ பிளானட் அமைச்சகத்தில் பதவிகள் மொத்தம் – 409.
பிராமணர்கள் – 327,
SC/ST – 19,
OBC – 63.

10 – தொழில் அமைச்சகத்தின்
மொத்த பதவிகள் – 74.
பிராமணர்கள் – 59,
SC/ST – 5,
OBC – 10.

ஃ கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்த பதவிகள் – 121. பிராமணர்கள் – 99,
SC/ST -00,
OBC – 22.

ஃ கவர்னர் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் ஒட்டுமொத்தம் – 27.
பிராமணர்கள் – 25.
SC/ST – 00,
OBC – 2.

ஃ வெளிநாட்டில் வாழ்ந்து வரும் இந்திய தூதர்கள் – 140.
பிராமணர்கள் – 140,
SC/ST – 00,
OBC – 00.

ஃ மத்திய அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் – 108.
பிராமணர்கள் – 100,
SC/ST – 03,
OBC – 05.

ஃ மத்திய பொதுச் செயலாளர்
பதவிகள் – 26.
பிராமணர்கள் – 18,
SC/ST – 01,
OBC – 7.

ஃ உயர் நீதிமன்ற நீதிபதிகள் – 330.
பிராமணர்கள் – 306,
SC/ST – 04,
OBC -20.

ஃ உச்ச நீதிமன்ற நீதிபதிகள் – 26.
பிராமணர்கள் – 23,
SC/ST – 01,
OBC- 02.

ஃ மொத்த I.A.S. அதிகாரிகள் – 3600.
பிராமணர்கள் – 2750,
SC/ST – 300,
OBC – 550,

கோயில்கள், ஜோதிடம், சாதி மதப் பாகுபாடு போன்றவை மட்டுமே பிராமணர்களின் தந்திரமான ஆயுதங்கள் ஆகும்.

நாட்டின் மக்கள் தொகையில்
3% க்கும் குறைவான பிராமணர்கள்
எவ்வாறு 90% பதவிகளைகளைப் பெற்றனர்?

3 விழுக்காடு பெரிதா 97 விழுக்காடு பெரிதா.?


மகாபாரதம் பற்றி மேலும் சில…

மேலும் உனது கேள்விகளுக்கெல்லாம் பதில்களை இங்கே தொகுத்துத் தருகிறேன். இத்துடன் முடிக்கலாம் என்றும் தோன்றுகிறது.

க பூரணச்சந்திரன்: 1. சாந்தனு செய்தது, அவன் மனைவி கங்கை செய்தது எல்லாமே தவறுதான். ஓரவஞ்சனை.
2. ஒரு மனிதன் தன் செயல்களால்தான் தீர்மானிக்கப்படுகிறான், வெறும் சொற்களால் அல்ல என்பது உண்மை என்றால், மகாபாரதத்தின் அத்தனை கேரக்டர்களும் தவறு செய்தவர்கள், தீயவர்கள்தான். அதில் சந்தேகமேயில்லை.

3. தன் தம்பியின் சுயம்வரத்திற்கு பீஷ்மன் சென்றது தவறு. சென்றது மட்டுமல்ல, மூன்று பெண்களைத் தூக்கிக் கொண்டுவந்தது மிகமிகத் தவறு. அது அவனது பிரம்மச் சரியத்துக்கு ஏற்றதும் அல்ல. ஏன் விசித்திரவீரியன் செல்லவில்லை என்று தெரியவில்லை. சுயம்வரத்தில் பெண்தான் நாயகனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இங்கு பீஷ்மன் ஒரு பெண் தேவைப் பட்டதற்கு மூன்றுபேரை தூக்கிக் கொண்டுவருகிறான். இதுவே முரண்பாடுதான். (எந்த மூலிகை பயன்படும் என்று தெரியாமல் அனுமன் சஞ்சீவி மலையையே தூக்கி வந்தது போல இருக்கிறது இது). அம்‍பை ஏற்கெனவே ஒருவனை வரித்தவள் என்று தெரிந்து அவளை அவள் தந்தையின் இடத்திலேயே விட்டிருக்க வேண்டும். மற்றப் பெண்களை தூக்கி வந்தது காட்டு தர்பார். வல்லான் வகுத்ததே வாய்க்கால். ஆணாதிககத்தின் உச்சம்.
4. மகாபாரதக் கதை மாந்தர்க்கு குடும்ப வரைபடமே தேவை யில்லை. ஒருவனும் முறையாகப் பிறந்தவன் அல்ல. ஆனால் அதுதான் கதையின் தெய்விகத் தன்மையை காட்டுகிறது என்கிறார்கள். (எல்லாமே அற்புதச் செயல்கள் அல்லவா?)மேலும் குந்தியுடனும் மாத்ரியுடனும் உறவு வைப்பவர்கள் எல்லாமே தேவர்கள் அல்லவா? அவ்வளவு உயர்ந்தவர்கள் எல்லாரும். (அல்லது தேவர்கள் அத்தனை பேருமே அவ்வளவு இழிந்தவர்கள் என்றும் கொள்ளலாம். புராண தேவர்களுக்கு பெண்களைக் கூடி பிள்ளை தருவதை விட வேறு வேலை இருந்ததாகத் தெரியவில்லை).

தமிழர் ஒழுக்கம் இலட்சியப் படுத்தப் பட்டதுதான் (stylized). ஆனால் உலகியலுடன் நெருக்கமானது. மகாபாரதம் முற்றிலும் புனைவு. அதாவது உயர்ந்த மேன்மையான மனிதர்கள் முயன்றால் தமிழர்தம் இலட்சிய வாழ்வை அடையலாம். பாரதத்தில் போல எந்த மேன்மையான மனிதனும் சூரியனுடனும் யமனுடனும் பிள்ளை பெற்றுக் கொள்ள முடியாது.

5. மகாபாரதம் ஒரு பங்காளிச் சண்டை என்பதற்கு மேல் வேறில்லை என்பது உண்மை.

6. கிருஷ்ணனைப் பற்றி நீ‍ கேட்கும் கேள்விகளைக் கேட்டால் அதெல்லாம் அவரவர் தலைவிதி என்று கூறிவிடுவாரகள். கர்ணன் குந்தி புத்திரன் என்பதை வெளிப்படுத்தியிருந்தால் மகா பாரதப் போரே நடந்திருக்காது. பாண்டவர்கள் கர்ணனிடம் தஞ்சமடைந் திருப்பார்கள். துரியோதனனுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கும். எல்லாம் சுபம். ஆனால் அப்படி நடக்கலாகாது என்பதற் காகத்தான் இந்தக் கதைத் திருப்பங்கள் வைக்கப் படுகின்றன.

கடைசியாக, பாரதத்தை நீ நல்ல விமரிசனக் கண்ணோட்டத்துடன் பார்த்திருக்கிறாய். இதில் கதையமைப்பில் உள்ள தவறுகளாக நீ சுட்டிக் காட்டுவன சரியானவை, ஏற்கத் தக்கவை. ஆனால் ஒரு புராணக் கதையில், ஒரு பக்கம் கடவுளர்களும், மறுபக்கம் மனிதர்களும் ஊடாடும் ஒரு கதையில், எப்படி நல்லது கெட்டது என்பதை தீர்மானிப்பது? கேரக்டர்களும் அப்படியே தீர்மானிக்கப்பட முடியாதவை. பாரதக் கதையில் எனக்கு முக்கியமாகப் படும் சில நீதிகள்.

பங்காளிச் சண்டை, குறிப்பாக மண்ணுக்காகச் சண்டை கூடாது. அது அனைத்தையும் அழித்து விடும்.

பெண்களை இழிவுபடுத்தக் கூடாது (பாஞ்சாலியை துரியோதனன் செய்ததைப் போல, அல்லது மூன்று பெண்களை பீஷ்மன் தூக்கி வந்தத‍ைப் போல…)இவை அனைத்துமே மோசமான எதிர் விளைவுகளை உண்டாக்குகின்றன. பாஞ்சாலி சபதம் செய்ய வில்லை என்றால் பாரதப் போர் நடக்கக் காரணம் இல்லை. பாண்டவர்கள் எதுவும் வாங்காமல்கூடப் போயிருப்பார்கள். துகில் உரிக்கும்போதுதான் பீமன் துரியோததனைக் கொல்வதாகச் சபதம் செய்கிறான். அதேபோல அமபையும சிகண்டியாப் பிறந்து பீஷ்மனைக் கொல்கிறாள். பெண்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பது இராமாயணத்தைவிட மகாபாரதத்தில் முனைப்பாக இருக்கிறது.

எல்லா மனிதர்களுக்குள்ளும் நல்ல பண்புகள், தீய பண்புகள் அனைத்துமே உள்ளன. உண்மையில் முற்றிலும் நல்லவன் என்றோ, தீயவன் என்றோ ஒருவனும் இல்லை. பலசமயம் நடத்தைப் பிறழ்வுகள்தான் உண்டு. இது இன்றைய உளவியல் நோக்கிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. எனவே எந்த மனிதனையும் அநாவசியமாக வெறுக்கவோ, அளவுக்கு அதிகமாக நேசிக்கவோ தேவையில்லை. எல்லா விஷயங்களிலும் ஒரு நடுநிலை தேவைப் படுகிறது.

இம்மாதிரிக் கருத்துகளைச் சொல்ல வந்ததாகத்தான் பாரதம் தோன்றியதாகப் படுகிறது. ஆனால் அந்தக்கால பிராமணர்களுக்கு இது போதியதாக இருந்திருக்காது. அதனால் எவனோ ஒருவன் தங்களுக்குச் சார்பாக, சாதியை வலியுறுத்த வேண்டி பகவத்கீதையை எழுதி இடையில் புகுத்திவிட்டான்.

கர்ணனை அவமானப் படுத்துமிடங்களிலும் ஏகலைவன் கதையிலும்…இப்படிப் பல இடங்களில் சாதி நிலைநிறுத்தத்தான் படுகிறது. அதில் சந்தேகமில்லை. மிக முக்கியமாக கவனத்தில் வராத சின்னச் சின்ன இடங்களில்கூட சாதித் தன்மை நோக்கப் படுகிறது. உதாரணமாக, குந்தி பாண்டவர்களுக்கு பதிலாக, ஒரு காட்டுச் சாதியினர் பிள்ளைகள் ஐவரையும் அவர்கள் தாயையும் அரக்கு மாளிகையில் படுக்க ஏற்பாடு செய்கிறாள். அவர்கள் கீழ்ச்சாதி என்பதால் திட்டமிட்டு எரிக்கப்படுகிறார்கள்.
பகவத் கீதை ஏற்கெனவே உள்ள சாதியமைப்பை இன்னும் அதிகமாக வலியுறுத்துகிறது. பிராமணர்கள், ஊழ்வினை, ஜாதிக்கொரு நீதி ஆகிய தங்கள் முக்கியமான கருத்துகளைக் கதையில் புகுத்தியும் ஆயிற்று. முடிந்தது மகாபாரதம்.

விவேக்: நன்றி மாமா.


மகாபாரதம் பற்றிய சிந்தனைகள்…

Vivek GK: ஆனால் ஏன் இந்த கண்ணோட்டத்தில் கீதை ஆராயப்படுவதில்லை…. இந்தியாவில் காந்தி, நேரு முதல் அப்துல் கலாம் வரை கீதையை புகழ்ந்திருக்கிறார்கள்…. மற்றும் western philosphers like Thoreau, Emerson, Herman Hesse to scientist Robert Oppenheimer… இவர்கள் அனைவரும் அதை புகழ்கிறார்கள்….
ஆனால் காந்தியை கொன்ற கோட்ஸேவும் கீதை தான் தன்னை influence செய்ததாக கூறுகிறான்… This is the reason I hate the concept of religious texts… The moral is twisted by people according to their desires…
என்னுடைய ஆதங்கம்… திருக்குறள் போன்ற அறம் போற்றும் தமிழ் text கீதை போன்ற sanskrit text overshadow செய்வது தான்…
ஒருவேளை கீதை மக்கள் self-identity செய்து கொள்ளும் வகையில், ஒரு grand romantic narrative கொடுப்பதால் (தர்மத்தின் பக்கம் தான் நின்று போர் செய்யும் தருவாயில் தன் சொந்தங்களே தனக்கு எதிராக நிற்பது) தான் popular ஆக‌ இருக்கிறதோ?…

க பூரணச்சந்திரன்: மக்கள் தர்மம் (நீதி) என்பது தர்மனின்/யுதிஷ்டிரனின் (பெயரையே பார்) பக்கமே இருப்பதாக மூளைச் சலவை செய்யப்படுகிறது என்பதுதான். மகாபாரதத்தில் நீதி எவர் பக்கமும் இல்லை. காரணம், மண்ணாசை என்று சொல்லப்படுகிறது. சாந்தனுவின் வம்சத்தில் மூத்தமகன் திருதராஷ்டிரன். அவனது மூத்தமகன் துரியோதனன். பழங்காலத்தில் மூத்த மகன்களே வாரிசுகள். அப்படியிருக்க பாண்டுவின் மகன்களுக்கு ஆட்சியுரிமை எங்கிருந்து வரும்? பாண்டு திருதராஷ்டிரன் சார்பாக ஆண்டுவந்தவன்தானே? இப்படி ஆரம்பத்திலிருந்தே கோளாறுகள். எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒருதலைப்பட்சமான முடிவுகள் திணிக்கப்படுகின்றன. அதனால்தான் புவிமன்னர்கள் யாவரும் சமமாகவே இரு பக்கமும் பிரிந்து நிற்கிறார்கள். உண்மையில் தர்மம் என்பது ஒன்றானால், அனைவருக்கும் அது தெரிந்தது தானே? கடைசிவரையிலும் பாண்டவர்களும் தவறுதானே செய்கிறார்கள்? (கிருஷ்ணனின் தூண்டுதலால் துரியோதனை இடைக்குக் கீழ் அடித்துக் கொல்லவில்லையா பீமன்? ஜெயிக்க வேறு வழி இல்லையே?) அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்ற பொய்சொல்லியே ஜெயிக்கிறான் தருமன். இதெல்லாம் தருமம்தானா? பிறகு அஸ்வத்தாமன் பழிவாங்க முனைந்து அனைத்துப் பாண்டவ வமிசத்தையும் கொல்கிறான். இறுதியில் பாண்டவர் ஐவர், பாஞ்சாலி, உத்தரை தவிர வேறு எவரும் மிச்சமில்லையாம். போர் என்றால் இப்படித்தான் இருக்கும் – இரண்டு பக்கமும் முற்றிலும் அழியும் என்றுதான் மகாபாரதம் காடடுகிறது.

மக்கள் பாண்டவர் பக்கம் ஐடெண்டிஃபை செய்துகொள்கிறார்கள் என்பது வாஸ்தவம். இன்று ஹீரோக்கள் பக்கம் அடையாளப்படுத்திக் கொள்வதுபோல. நான் பலமுறை யோசித்திருக்கிறேன். எல்லா சினிமாவிலும் வில்லனைக் கொல்லும் முன்பு அவன் அடியாட்கள் அனைவரையும் கதாநாயகன் கொல்லுவான். அது குற்றம் என்று யாரும் சொல்வதில்லை. ஏன் அவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு மனைவி மக்கள் இல்லையா? வில்லன் ஹீரோவின் தாய்/தந்தை/நெருங்கிய ஓர் உறவைக் கொன்றதற்காக இவன் நூறுபேரைக் கொல்வதாகக் காட்டுவார்கள், ஆனாலும் ஹீரோ செய்ததே சரியென்று நிறுவப்படும் (மூளைச் சலவை செய்யப்படும்). இது போலத்தான்…

(உண்மையாக/கற்பனையாக) போரிடும் எல்லாருக்கும் ஒரு கிருஷ்ணன் தேவைப்படுகிறான். அதனால் அவர்கள் எல்லாருக்குமே கீதை தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். போரிடுபவன் காந்தியாக இருந்தால் என்ன, கோட்ஸேவாக இருந்தால் என்ன? இருவருக்குமே தங்களை நியாயப்படுத்த கிருஷ்ணன் தேவைதானே?
தமிழில் (வடமொழியிலும்கூட) நியாயம்-நீதி என்று இரண்டு இருக்கின்றன. அர்ஜுனன் சொல்வது நியாயம். கிருஷ்ணன் சொல்வது வறட்டு நீதி. (இன்றைய கோர்ட்நீதி). நீதியை விட நியாயமே முக்கியமானது.


மகாபாரதச் சிந்தனைகள்-தொடர்கிறது

ஏன் மகாபாரதக் கதையைத் தவிர இத்தனை நூற்றாண்டுகளாகத் தெருக்கூத்துக் கலைஞர்கள் வேறு எ‍தையும் கையாளவில்லை என்பது மிகப் பெரிய ஆய்வினை வேண்டுவது. மழை வேண்டுவது, பாரதம் படிப்பது, அதைக் கூத்தாகப் போடுவது எல்லாம் ஒரு தொடர்போல நிகழ்ந்திருப்பதாகத் தோன்றுகிறது. மேலும் அந்தக் கதைகளை ஒட்டி மக்கள் தங்கள் கற்பனையைச் செலுத்திக் கூத்துப் பாடல்களையும் வசனங்களையும் தாங்களாகவே உருவாக்கி வந்துள்ளனர். உதாரணமாக, நான் வல்லம் (ஆரணி) என்ற ஊரில் ஆசிரியனாக 1969-70இல் பணியாற்றினேன். அது வந்தவாசிக்கும், செய்யாறுக்கும், சேத்துப்பட்டுக்கும் இடையிலுள்ள ஓர் ஊர். இந்த மூன்று ஊர்களுமே பழங்காலத்தில் தெருக்கூத்தின் பயிற்றுமையங்களாகச் செயல்பட்ட ஊர்கள். என்னிடம் படித்த ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவன் தானாகவே பக்கத்துப் பக்கத்து ஊர்களில் பாடப்படும் கூத்துப் பாடல்களைப் பாடுவான், அவனாகவே இட்டுக் கட்டவும் செய்வான். எல்லாம் எங்கேயோ மாயமாக மறைந்துவிட்டது…காரணம் திரைப்படமா, அரசியலா, கூத்து மட்டுமே நடத்தி வாழ்க்கை நடத்த வசதியற்றுப் போனமையா, மாறிவந்த நவீனமயமாக்கலா, ஆபாசக் கலைகளா…என்னத்தைச் சொல்வது?

4. கேள்வி: தமிழில் இயல் இசை நாடகம் என்று முத்தமிழ் இருப்பதாக சொல்கிறார்கள்… ஆனால் அதில் நாடகங்கள் பற்றி குறைவாகவே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்…. அதை பற்றிய awareness ஏ மக்களிடம் இருப்பதாக தெரியவில்லை…. எனக்கு தெரிந்த நாடகங்கள்…. சினிமா மற்றும் TV நாடகங்கள் தான்…

பதில் : எனக்குத் தெரிந்தவரை இன்று இயலைத் தவிர இசை, நாடகத் தமிழ்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப் பகுப்புக்கான நோக்கமும் தெரியவில்லை. உண்மையில் இவை மூன்றையும் தங்கள் மொழியில் கொண்ட ஏராளமான நாடுகள் உள்ளன. அங்கெல்லாம் இப்படி போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் இல்லாத இசைப்பாடல்களா, இசையமைப்பாளர்களா, ஆபராக்கள் முதலிய இசைநாடகங்களா, பிற நாடகங்களா? அவர்கள் மூன்றிங்லீஷ் என்று போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. தங்கள் தங்கள் போக்கில் இயல்இசைநாடகம் மூன்றையுமே வளர்க்கிறார்கள். நாம் வாய்ப்பேச்சு வீரர்கள். தமிழ்இசை வளரும் வரை, தமிழில் நாடகங்கள் தனித்துறை என்று சொல்லுமளவுக்கு வளரும் வரை, இருப்பது முத்தமிழ் அல்ல, ஒரேஒரு இலக்கியத் தமிழ்தான். முத்தமிழ் என்பது அதுவரை பொய்.

5. கேள்வி: பகவத்கீதை பற்றி உங்கள் கருத்தென்ன?

க பூரணச்சந்திரன்: எந்த ஆய்விலும் பகவத்கீதை நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு மேல் மகாபாரதத்துக்குப் பின் வந்தது என்பதை நினைவில் வைக்க வேண்டும். ஏனெனில் மகாபாரத காலத்தில் நெகிழ்வாக இருந்த சாதிகள் பகவத்கீதை காலத்தில் முற்றிலும் இறுகிப் போயிருக்கலாம். எனவே பகவத் கீதை சாதிகளை வற்புறுத்தும் ஒரு நூலாகவே அமைந்துவிட்டது.

அது சாதியை வற்புறுத்துகிறது என்பது எனக்கு முக்கியமில்லை. அது அதன் இயல்பு. ஆனால் கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கு நடக்கும் விவாதம் ஜாதி பற்றியதல்ல. கடமை பற்றியது. அர்ஜுனன் கேள்வி, முன்னால் இருக்கும் உறவினர் மட்டுமல்ல, அவர்களுடன் சேர்ந்த பல லட்சக்கணக்கான பேர்களையும் தருமத்தின் பெயரால் கொல்வது தகுமா என்பதுதான். கிருஷ்ணன் சொல்லும் பதில் இதற்கு ஏற்புடையதல்ல. அவன் சொல்வது, “எத்தனை பேரானால் என்ன, சொந்தமாக இருந்தால் என்ன, தருமம் (உன் சாதிக்கடமை யான கொல்லுதல்)தான் முக்கியம், ஆகவே கொல்” என்பது. பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்களையும் தாண்டி அது என்ன தருமம், நீதி? தருமம் பற்றி எலலாருக்கும் இருப்பது ஒரு பார்வை தான். (நோஷன்). இது தருமமா, அது தருமமா என்றெல்லாம் ஆராய்ந்து எதையும் நிலைநிறுத்துவது அவ்வளவு எளிதல்ல. இன்னும் கேட்டால் எது உண்மை என்பது போலவே, ஆராய முடியாத முடிவற்ற ஒன்றாக இருப்பதுதான் எது தர்மம் (நீதி) என்பதும். (இங்கே தர்மம் என்ற வடசொல்லின் அர்த்தத்தை வைத்து (மதம்) பலபேர் குட்டை குழப்புகிறார்கள்.) நாம் பொதுவான எல்லா மனிதர்களுக்கும் ஏற்ற சமூகநீதியைப் பற்றித்தான் பேச இயலும். எல்லாருக்கும் உணவு தேவை. எனவே அதற்கு வழி செய்ய வேண்டும் என்பது சமூக நீதி.
கிருஷ்ணன் கூறும் நீதி, சிங்களர்கள் தமிழ் ஈழ மக்களைக் கொன்ற நீதிதான். அல்லது யூதர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று கருதி ஹிட்லர் செய்த நீதிதான்.
mass destruction எதற்கும் பின்னால் கிருஷ்ணனின் நீதிதான் இருக்கிறது.
அதைக் கேள்வி கேட்கும் அர்ஜுனனின் (பொதுமக்களின்) வாயைச் சாமர்த்தியமாக அடைப்பதுதான் பகவத்-கீதை.