பொதுத்துறைகளின் முக்கியத்துவம்

*கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு எதிராக தமிழக அரசு பணியாளர்கள் 3.80 லட்சம் பேர் களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்கள்.*

இதில் அனைத்துத் தமிழக அரசு மருத்துவர்களின் பணி என்பது தனிச் சிறப்பான ஒன்று.

*தங்களின் உயிரைப் பணயம் வைத்து வரும் நாட்களில் நமக்காக இவர்கள் உழைக்கப் போகிறார்கள்*

*****

சில மாதங்களுக்கு முன்பு தங்களின் *உரிமைகளுக்காக போராடிய இதே அரசுப் பணியாளர்களுக்கு எதிராக தமிழக முதல்வர் எடப்பாடி உதிர்த்த அரிய முத்துகள்*.

“தமிழக அரசின் வருவாயில் பெரும் பகுதி அரசு பணியாளர்களின் ஊதியத்திற்கே போய்விடுகிறது ”

எனத் தானும் ஒரு அரசுப் பணியாளர் (எல்லாரையும் விடக் கூடுதலாக சம்பளம் மற்றும் பிற கிம்பளங்களைச் சட்டசபையில் தாங்களாகவே ஏற்றிக்கொண்டு மக்களின் பிச்சையில் வாழ்கின்ற அரசுப் பணியாளர்) என்பதை மறந்து ஏதோ கொள்ளை போகிற தொனியில் அலறிய காட்சி நினைவுக்கு வந்தது.

*கடந்த காலங்களில் உரிமைக்காக போராடிய சத்துணவு, சாலை, சுகாதார, மக்கள் நல பணியாளர் என பல்வேறு துறையின் அரசு பணியாளர்களை அதிமுக அரசு எப்படி கையாண்டது என்பதையும், ஏதோ மக்கள் பணத்தை இவர்கள் ஏமாற்றிப் பறித்துக்கொண்டதை போன்ற ஒரு தோற்றத்தை அரசு அதிகார உளவு அமைப்புகளின் மற்றும் ஊடகங்கள் வழியாகவும் பொது மக்களின் புத்தியில் போலியாக கட்டமைத்த அருவருப்பான செயலும் நினைவுக்கு வருகிறது.*

ஆனால் அப்படி ஏமாற்றுக்கார மகுடம் சூட்டப்பட்ட அதே அரசுப் பணியாளர்கள் தான் தங்களின் குடும்பத்தை,உயிரை பற்றி கவலைப்படாமல் இன்று களத்தில் இதே அரசால் களத்தில் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள்.

*****

இதை இப்போது ஏன் பேசு பொருளாக்குகிறேன் என்றால் *பொதுத்துறைகளை சிதைத்து தனியார் துறைகளுக்கு பட்டுக் கம்பளம் விரிக்கும் மத்திய அரசு, அதற்கு குனிந்தே துணைபோகும் மாநில அரசுகள் ஆளும் நாட்டில் கொரோனோ வைரஸ் தாக்குதல் போன்ற இயற்கைப் பேரிடர் பெரும் தொற்று நோய்கள் பொதுத்துறைகளின் அதீத தேவையை உணர்த்துகிறது*.

பொதுத்துறை என்பது ஏன் பலமானதாக இந்த நாட்டில் இருக்கவேண்டும் என்பதை சிந்தித்து பாருங்கள்.

எளிய படிப்பறிவில்லா மக்கள் திரளாய் வாழும் இந்திய துணைக்கண்டத்தில் எல்லா துறைகளும் 90% தனியார் மயமாக ஆகி இருந்தால் இதுபோன்ற கொடிய கொரோனோ பெரும் தொற்று நோய் தாக்குதலின் போது எப்படி இருக்கும் தெரியுமா?

*தகுந்த மருத்துவ உதவியற்று ஹிட்லரின் வதை முகாம்களை விட கொடூரமாய் தான் இருக்கும்*.

கஜா,வர்தா,ஒக்கி என பல புயல்கள்,சென்னை மழைவெள்ளம் போன்ற இயற்கை பேரிடரின் போது பொதுத்துறை தான் மறு சீரமைப்புகளில் முன் நின்று இயல்பு வாழ்விற்கு அந்த மக்களை மீட்டு வந்தது என்பதை தமிழ்ச் சமூகம் அறியும்.

அப்போதெல்லாம் தனியார் துறை எங்கே போய் ஓடி ஒளிந்துகொண்டது என்பதையும் அவர்களே நேரடியாகவும் உணர்ந்தார்கள்.

*போற்றுவோம் பொதுத்துறைகளை*.

*நிறைவேற்றட்டும் அரசு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை*.
(முகநூல் பதிவிலிருந்து)