விருதுகள்

ஆனந்தவிகடன் விருது 2011

ஆந்திரக் கவிஞர் வரவர ராவின் ‘சிறைப்பட்ட கற்பனை’ நூலை மொழிபெயர்த்தமைக்குத் திரு. பூரணச்சந்திரனுக்கு 2011 இல் ஆனந்தவிகடனின் அந்த ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது அளிக்கப்பட்டது.

 

சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை விருது 2015

சல்மான் ருஷ்தீயின் ‘நள்ளிரவின் குழந்தைகள்’ நூலைச் சிறப்புற மொழிபெயர்த் தமைக்காக நாமக்கல் திரு. சின்னப்ப பாரதி அவர்களின் இலக்கிய அமைப்பு, ரூ. 10,000 பரிசும், நற்சான்றிதழும் வழங்கி திரு. பூரணச்சந்திரன் அவர்களைச் சிறப்பித்தது.

ஆனந்தவிகடன் விருது 2016

2016ஆம் ஆண்டின் கட்டுரைத் தொகுப்பில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது திரு. பூரணச்சந்திரனுக்கு 30-03-2017 அன்று சென்னை வர்த்தக மையத்தில் நிகழ்ந்த விழாவில் அளிக்கப்பட்டது.

நூல்: இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு (Hindus An Alternative History)

ஆசிரியர்: வெண்டி டோனிகர்

 

2016ஆம் ஆண்டிற்கான தமிழின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது – சாகித்திய அகாதெமி விருது

தமிழ் மொழிக்கென வழங்கப்படுகின்ற, 2016ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதெமி விருது திரு. க. பூரணச்சந்திரனுக்கு  வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி, நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

நூல்: பொறுப்புமிக்க மனிதர்கள் (Serious Men)

ஆசிரியர்: மனு ஜோசப்