நான்கு பேர் ஒரு பூங்காவில் தற்செயல் நிகழ்வுகள் ஒன்றுசேர்ந்து வருவதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் சொன்னார், “என் மனைவி இரு நகரங்களின் கதை படித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில்தான் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.”
மற்றொருவர் சொன்னார், “ஆச்சரியம். என் மனைவி மூன்று துப்பாக்கிவீரர்கள் கதையைப் படித்தாள். அந்தச் சமயம்தான் மூன்று குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றாள்.”
மூன்றாம் ஆள், இதெல்லாம் என்ன ஆச்சரியம்!சொர்க்கத்தில் சந்திக்கும் ஐவர் என்ற புத்தகத்தை என் மனைவி படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளைப் பெற்றாள், தெரியுமா?” என்றார்.
நான்காம் ஆள் கவலை தோய்ந்த முகத்துடன் ஓடப்போவது போல் வேகமாக எழுந்திருப்பதைப் பார்த்தார்கள். “என்ன சார் விஷயம்?” என்று கேட்டார்கள். “என் மனைவியைப் பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறேன். அவள் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள்” என்றார் அவர்.