நான்கு பேர் ஒரு பூங்காவில் தற்செயல் நிகழ்வுகள் ஒன்றுசேர்ந்து வருவதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் சொன்னார், “என் மனைவி இரு நகரங்களின் கதை படித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில்தான் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.”
மற்றொருவர் சொன்னார், “ஆச்சரியம். என் மனைவி மூன்று துப்பாக்கிவீரர்கள் கதையைப் படித்தாள். அந்தச் சமயம்தான் மூன்று குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றாள்.”
மூன்றாம் ஆள், இதெல்லாம் என்ன ஆச்சரியம்!சொர்க்கத்தில் சந்திக்கும் ஐவர் என்ற புத்தகத்தை என் மனைவி படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளைப் பெற்றாள், தெரியுமா?” என்றார்.
நான்காம் ஆள் கவலை தோய்ந்த முகத்துடன் ஓடப்போவது போல் வேகமாக எழுந்திருப்பதைப் பார்த்தார்கள். “என்ன சார் விஷயம்?” என்று கேட்டார்கள். “என் மனைவியைப் பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறேன். அவள் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள்” என்றார் அவர்.
Author: poornac123
Jesus Christ
The Greatest Man in History (or Mythology, as you may like)
HE had no servants,
yet they called Him Master.
Had no degree,
yet they called Him Teacher.
Had no medicines,
yet they called Him Healer.
He had no army,
yet kings feared Him.
He won no military battles,
yet He conquered the world.
He committed no crime,
yet they crucified Him.
He was buried in a tomb,
yet He lives today.
மோடியின் ரபேல் விமான ஊழல்
மோடியின் ரபேல் விமான ஊழலும், ஊடகங்களின் கள்ள மௌனமும்!
ஒரே ஒப்பந்தம் மோடியின் சுதேசி , ஊழல் என அனைத்து பொய்களையும் உடைத்தெறிந்து மோடியின் உண்மை முகமுடியை உலகிற்கு உணர உதவியது என்றால் அது ரபேல் விமான ஊழல் தான். அது கடந்து வந்த பாதை:
MIG-21 வகை விமானங்கள் அதிகப்படியான விபத்துகளை சந்தித்திருந்தன. இதனைக் கருத்தில் கொண்டு 2007 ஆம் ஆண்டு 126 MMRCA (Medium multi-role combat Aircraft) விமானம் வாங்கும் பொருட்டு டெண்டர் (RFP) விடப்பட்டது
2008 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மிக்-35, சுவீடன் JAS-39 (SAB ), பிரான்ஸ் Rafale (Dassult ), அமெரிக்கா F-16 Falcon (Lockheed Martin), Boeing F/A-18 Super Hornet, Eurofighter Typhoon போன்ற கம்பெனிகள் டெண்டரில் பங்கெடுத்தனர். பல கட்ட மதிப்பீட்டின் முடிவில், 2012 ஆம் ஆண்டு குறைந்த விலைப் புள்ளிகள் அளித்த நிறுவனம் என்ற அடிப்படையில் ரபேல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சுமார் 10.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 126 போர் விமானங்களை ரபேல் நிறுவனம் சப்ளை செய்ய வேண்டும். அதில் 18 பறக்கும் நிலையில் முழுவதுமாக செய்து தர வேண்டும். மீதம் 108 இந்தியாவில் HAL நிறுவனம் மூலம் டெக்னாலஜி ட்ரான்ஸ்பர் முறையில் செய்ய வேண்டும் போன்ற விதிகளை இந்தியா விதிக்கிறது
இந்த ஒப்பந்தத்தில் முக்கிய அம்சம் இரண்டு .
1. டெக்னாலஜி ட்ரான்ஸ்பர்: MMRCA போர் விமானம் செய்ய தேவையான அனைத்து டெக்னாலஜியையும் பொதுத் துறை நிறுவனமான HAL நிறுவனத்திடம் அளிக்க வேண்டும் அதன் மூலம் நாமே தேவைப்படும் விமானத்தை உருவாக்கும் திறனை பெறலாம் (இப்பொது “Make in India” என்று வெள்ளையடிக்கப்பட்ட திட்டம் அப்போது “National Manufacturing Policy”) என்று இருந்தது. ToT (transfer of technology ) என்பது எப்படி செய்யவேண்டும் என்பது மட்டும் அல்ல, எதனால் இப்படி செய்யவேண்டும் என்பதுவும் கூட ஏற்கனவே இருந்த தேசிய உற்பத்திக் கொள்கையில் வரையறுக்கப்பட்டு இருந்தது. இதற்கு புது வண்ணம் பூசிதான் மோடி மேக் இன் இந்தியா என்று உருமாற்றம் செய்தார்.
2. Offset Clause :இந்த கான்ட்ராக்ட்டின் மூலம் வரும் வருமானத்தில் 50% Dassult நிறுவனம், விமான உதிரி பாகங்கள் தயாரிக்க இந்தியாவிலேயே முதலீடு செய்ய வேண்டும்.
முதலில் எல்லா விதிகளுக்கும் தலையசைத்த Dassult நிறுவனம் மெல்ல நமது நிபந்தனைகளை மாற்ற முயற்சி செய்தது. HAL உருவாக்கும் விமானத்திற்கு உத்தரவாதம் தர மறுத்தது. டெக்னாலஜி ட்ரான்ஸபெர் ஒப்பந்தத்தை மாற்ற முயற்சித்தது. இது பின் என்ன ஆயிற்று என்பதை பின்னர் பார்க்கலாம்.
இது நடந்தது 2012ம் ஆண்டு. காங்கிரஸ் அரசின் மிக மோசமான காலகட்டம். 2G ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல் என அடுக்கடுக்கான பிரச்னைகளை சந்தித்தது. அந்த காலகட்டத்தில் L1 வெண்டராக Dassult நிறுவனத்தை அறிவித்ததும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி மைசூரா ரெட்டி டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டை வைக்கிறார்.
அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது, மேலும் ஆட்சி முடிவில் இருக்கும் தருவாயில் மிக பெரிய முடிவு எடுக்க வேண்டாம் என்று அப்பொழுதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தார்.
இதன் பின் 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சி அமைத்த பின்பு பாதுகாப்புத் துறை, அதுவரை கிடப்பில் போடப்பட்ட ஒப்பந்தத்தை கையில் எடுத்து மிக மும்முரமாக துரிதப்படுத்த துவங்கியது.
Febrauary 2015 ஆம் ஆண்டு பெங்களூர் வந்த Dassult தலைமை செயல் அதிகாரி, எரிக் ட்ரேப்பியர், விலையில் எந்த மாற்றமும் இல்லை, ஒப்பந்தப்படி 10.2Bn$ தான் என்பதை உறுதி செய்கிறார்
March 25,2015 ஆம் ஆண்டு 126 போர் விமானத்தை HAL உடன் இணைந்து தயாரிப்பதை உறுதி செய்து ஒரு விழாவில் IAF முன்னணியில் Dassult நிறுவனம் அறிவிக்கறது
March 27,2015 ஆம் ஆண்டு Dassult கம்பெனி சேர்மன் அளித்த பேட்டியில் 126 போர் விமானம் வாங்கும் டீல் 95% முடிவடைந்தது என கூறுகிறார்
April 2015, இப்படி நிகழ்வுகள் சென்று கொண்டிருக்கும் போது அரசு முறை பயணமாக மோடி பிரான்ஸ் செல்ல திட்டமிடப்படுகிறது. அங்கு வழக்கமாக வெளியுறவுத் துறைச் செயலாளர் நடத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக சில கேள்விகள் கேட்கப்படுகின்றது
அதற்கு அவர் அளித்த பதில்
“இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும், பிரெஞ்சு கம்பெனிக்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது அதையும் மோடியின் விஜயத்தையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து பார்க்க வேண்டாம்” என்று கூறுகிறார்
அதன்பின் பிரான்ஸ் அதிபரும் மோடியும் பயண இறுதியில் கூட்டறிக்கை விடுகின்றபோது ரபேல் போர் விமானம் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதாக கூறுகின்றனர். இதுவரை போட்டு வைத்த மொத்த கோடுகளையும் அழித்து விட்டு புதிதாக ஒப்பந்தம் உறுதி செய்யப்படுகிறது.
அதன் படி 81 போர் விமானம் மட்டுமே வாங்குவது, டெக்னாலஜி ட்ரான்ஸபெர் முறையை கை விடுவது என முடிவு செய்யப்பட்டது. மற்ற விபரங்கள் பின்னால் தெரிவிக்கப்படும் என்று முடித்துக்கொண்டனர்.
ராணுவ தளவாடங்கள், போர் விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல்கள் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்குகையில் மிக மிக முக்கியமான கூறு, தொழில்நுட்ப மாறுதல். ஏனெனில், தொழில்நுட்ப மாறுதல் அம்சம் ஒப்பந்தத்தில் இருந்தால், நமது ராணுவ தளவாட ஆராய்ச்சி நிறுவனங்களின் மூலம், நாமே எதிர்காலத்தில் அவற்றை தயாரிக்க முடியும். ஆகையால் எந்த ஒப்பந்தத்திலும் இது அவசியம்.
ஆனால், இப்படி ஒரு முக்கியமான கூறை ரத்து செய்ய, இந்தியா இது வரை சந்தித்திராத, மகாத்மா காந்தியை விட மிக தீவிரமான தேசபக்தரான மோடி எப்படி ஒப்புக் கொண்டார் என்பதுதான் புரியாத புதிர்.
இது முன்னாள் ராணுவ தளபதிகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது 81 போர் விமானம் மிக குறைந்த அளவு என்று வாதிட்டனர். சரி இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் போது நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ன செய்து கொண்டிருந்தார் ? என்னதான் பிரதமர் என்பவர் நாட்டின் தலைமை அமைச்சர் என்றாலும், பாதுகாப்புத் துறை தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அவரது பங்கு மிக மிக முக்கியம். ஏனெனில் நாள்தோறும், முப்படை தளபதிகளோடு நெருக்கமான தொடர்பில் இருக்கும் அவருக்குத்தான், நம் நாட்டின் பாதுகாப்புக்கு எது தேவை, எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். ஆனால் ரபேல் ஒப்பந்தம் திருத்தி அமைக்கப்பட்டு கையெழுத்தானபோது அவர் கோவாவில் மீன் கடை திறப்பு விழாவில் பங்கெடுத்துக்கொண்டிருந்தார்
முதலில் சுப்ரமணிய சுவாமி இந்த ஒப்பந்தத்திற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார் அதில் ரபேல் விமானம் தரமற்றது அதனை வாங்க முடிவு செய்தால் பொது நல வழக்கு தொடருவேன் என்று பேட்டியும் கொடுக்கிறார். . 2016ல் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டவுடன் இந்த பிரச்சனையைக் கைவிடுகிறார். அதன் பிறகு, மோடிக்கு அடுத்த தீவிர தேசபக்தரான சுவாமியும் இது குறித்து வாயே திறக்கவில்லை.
இப்படிப் பாதுகாப்பு அமைச்சருக்கும் தெரியாமல், நிதி அமைச்சரையும் கேட்காமல் யாரைக் கேட்டு இந்த முடிவை எடுத்திருப்பார் ? ஒரு வேளை பாரிசிற்கு மோடியுடன் சென்ற அம்பானியைக் கேட்டு எடுத்திருப்பாரோ ? அம்பானிக்கும் பாதுகாப்புத் துறைக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழும்பி இருக்கிறது.
முதலில் எல்லாவற்றிற்கும் சம்மதம் தெரிவித்த நிறுவனம் திடீர் என முறுக்கி கொள்ள காரணம் என்ன ? L1 அந்தஸ்து பெற்ற இரண்டே வாரத்தில் எதேச்சையாக Dassult நிறுவனம், முகேஷ் அம்பானியுடன் கைகோர்க்கிறது. அதன் பின்பு தான் Dassult RFP யில் உள்ள ஒரு ஒரு விதியையும் மாற்ற முயல்கிறது, குறிப்பாக எப்படியாவது HAL நிறுவனத்தை ஓரம் கட்டும் வேலையை பார்க்கிறது.
மூத்த அம்பானி வந்து விட்டார். இளைய அம்பானி மட்டும் சளைத்தவரா என்ன ? ரிலையன்ஸ் டிபென்ஸ் என்ற நிறுவனத்தை அனில் அம்பானி தொடங்குகிறார். அவர் அந்நிறுவனத்தை தொடங்கியது 28/03/2015. சரியாக மோடி பிரான்ஸ் நாட்டிற்கு செல்லும் 3 வாரம் முன்பு.
August 2014, பாதுகாப்பு துறையில் நேரடி அந்நிய முதலீட்டை 49% சதவீதமாக உயர்த்துகிறது அரசு. அதன் அடிப்படையில் 51:49 சதவிகித முறைப்படி Dassult நிறுவனத்துடன், அனில் அம்பானி கூட்டணி அமைக்கிறார். பிரான்ஸ் ஒப்பந்தத்தின் பின் Offset Clause அடிப்படையில் விமான உதிரி பாகம் செய்யும் ஒப்பந்தம் அவர் கைகளுக்கு செல்கிறது .
மற்ற விபரங்கள் பின்னால் உறுதி செய்யப்படும் என்று கூட்டறிக்கையில் சொன்னார்கள் அல்லவா அதில் தான் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
பழைய ஒப்பந்தப்படி 126 விமானங்கள் 90,000 கோடிக்கு வாங்க இருந்ததை கைவிட்டு வெறும் 36 விமானங்களை 60,000 கோடிக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது. இதன் படி ஒரு விமானம் 714 கோடிக்கு வாங்குவதற்கு பதில் 1611 கோடிக்கு வாங்கவிருக்கிறோம்.
இப்பொழுது இந்த விலையுயர்வை நியாயப்படுத்த முன்வைக்கப்படும் காரணங்களைப் பார்ப்போம்
அதிக நாட்கள் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகாததால் இந்த விலை உயர்வு என்று கூறினால் அது தவறு. ஏனெனில் RFPயில் மிக தெளிவாக பண வீக்க விகிதம் 3.9% நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படியில் கணக்கிட்டால் 3 மடங்கு விலை அதிகரிக்க வாய்ப்பே இல்லை.
UPA செய்த ஒப்பந்தத்தில் இருந்த specification உயர்த்தியுள்ளதால் இந்த விலை ஏற்றம் என்பது இரண்டாவது காரணம். விலை மாற்றம் என்ற கேள்வியை நீர்த்துப் போகச் செய்வதற்கான வேலை தான் இது. அப்படி என்ன மாற்றம் என்று பார்த்தால் meteror missile பொருத்தப்படுகிறது (அதன் விலை 2Mn$ 13 கோடி.
மற்றொரு மாற்றம் Helmet Mounted Display System (HMDS) அதாவது helmet முன் உள்ள திரையில் தேவையான விபரம் தெரியும். அதன் மூலம் எதிரி விமானத்தை குறி வைத்து லாக் செய்ய முடியும். இதன் விலை 0.4mn$ (2.5 கோடி). ஆக இந்த இரு upgrade செலவுகளையும் சேர்த்தால் கூட 730 கோடி தான் வருகிறது.
இந்த தகவல்களும் அதிகாரப்பூர்வமானவை அல்ல. செய்தித்தாள்களில் விவாதிக்கப்படும் விஷயங்கள் தான். ஆனால் அதிக அளவில், மிகுந்த பொருட்செலவில் ராணுவ தளவாடங்கள் வாங்குகையில், பேச்சுவார்த்தை நடத்தி, விலையை நிச்சயமாகக் குறைக்க முடியும்.
இந்த HMDS தயாரிப்பது இஸ்ரேலை சேர்ந்த Elbit என்ற நிறுவனம். அந்நிறுவனம் March 2016 ஆம் ஆண்டு Aero defence system என்ற இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் HMDS இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்திடுகிறது. அந்த Aero defence systems நிறுவனம் நம் அதானி குழுமத்தினுடையது.
அம்பானிக்குக் கொடுத்துவிட்டு அதானிக்குக் கொடுக்காமல் இருக்க முடியுமா என்ன ? இவரும் இந்த நிறுவனத்தை எதேச்சையாக 17/07/2015 நிறுவுகிறார். அதாவது மோடி பிரான்சில் இருந்து திரும்பிய 2 மாதத்தில்.
சரி எதேச்சையாக இந்த நண்பர்கள் அடைந்த பயனை விடுத்து இந்த ஒப்பந்தத்தின் இறுதியில் நாம் இழந்தது என்ன என்பதை பார்ப்போமா ?
1) 126 விமானம் 90,000 கோடிக்கு வாங்குவதற்கு பதில் 36 விமானம் மட்டுமே 60,000 கோடிக்கு வாங்க இருக்கிறோம். இதில் offset clause விதிபடி மொத்த வருவாயில் (58,000 கோடி) 50% சுமார் 22,000 கோடி அனில் அம்பானிக்கு செல்கிறது.
2) முடிவு செய்து வைத்த பட்ஜெட்டின் பெரும் பகுதியை வெறும் 2 squadron விமானங்கள் வாங்க செலவிட்டதால் இது நம் விமானப் படைக்கு பெரும் பின்னடைவு என ஓய்வு பெற்ற தளபதிகள் கருத்து தெருவிக்கின்றனர். பாகிஸ்தான், சீனாவுடனான இரண்டு முனைப் போர் ஏற்படும் போது இந்த விமானங்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்று கவலை தெரிவிக்கின்றனர்.
3) தொழில்நுட்ப மாற்ற முறைப்படி பொதுத்துறை நிறுவனமான HAL நிறுவனத்திற்கு வரவிருந்த அத்தனை பயன்களும் இனி அம்பானி நிறுவனத்திற்கு செல்லும்.
4) 108 விமானங்கள் HAL நிறுவனம் தயாரிக்க இருந்தது. இது தற்போது நிறுத்தி வைக்கபட்டிருக்கிறது. இதன் மூலம் உருவாகும் வேலை வாய்ப்பு முற்றிலும் பறிபோனது.
இதை எல்லாம் சுட்டிக் காட்டி காங்கிரஸ் நடத்திய November 14/2017 பத்திரிக்கையாளர் சந்திப்பை ஊடகங்கள் எதுவும் கவர் செய்யவில்லை. அதன் பின் புதிய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் காங்கிரஸ் கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இந்த ஒப்பந்தம் மிகவும் அவசியமானது என்றும், போர்க்கால அடிப்படையில் அதை துரிதப்படுத்தி முடிக்கப்பட்டதற்கு அரசை பாராட்டவேண்டுமே தவிர குறை கூறக் கூடாது என்று கூறினார்.
காங்கிரஸ் முன்வைத்த கீழ்க்கண்ட கேள்விகளுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை:
1) பாதுகாப்பு கொள்முதல் விதிமுறை 2013இன் படி “ஒப்பந்த பேச்சுவார்த்தை குழு” மற்றும் “விலை நிர்ணய குழு” இவை இரண்டையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பிரதமர் செயல்பட்டது ஏன் ?
2) 13.03.2014 அன்று செயல்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி HAL பொதுத்துறை நிறுவனத்திற்கு வரவிருந்த ஒப்பந்தம் தனியாருக்கு சென்றது எப்படி?
3) விமானக் கட்டமைப்பில் பல வருட அனுபவம் உள்ள HAL தவிர்த்து இதுவரை முன்னனுபவமே இல்லாத அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது ஏன் ?
4) தொழில்நுட்ப மாற்றம் இல்லாதபட்சத்தில் விமானம் பழுதுபார்ப்பது, பராமரிப்பது அனைத்துக்கும் Dassult நிறுவனத்தை எப்போதும் சார்ந்திருப்பது சரியா ?
இவையெல்லாம், காங்கிரஸ் கட்சி எழுப்பியுள்ள சில கேள்விகள். இவற்றை, தேசிய ஊடகங்கள் தொடர்ந்து எழுப்பி, மத்திய அரசை பதில் சொல்ல வைக்குமாறு நிர்பந்தித்திருக்க வேண்டும். இது நாடு முழுக்க பெரும் விவாதப் பொருளாக ஆகியிருக்க வேண்டும். ஆனால், பத்மாவதி திரைப்படம் வெளி வருமா வெளி வராதா, மணி சங்கர் அய்யர், பிரதமரை தாழ்ந்த சாதி என்று சொன்னாரா சொல்லவில்லையா, ராகுல் காந்தி குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, ஸ்டார் வார்ஸ் படம் பார்த்தாரா இல்லையா, திரையரங்குகளில் தேசிய கீதம் பாடினால் தேசபக்தி வளருமா வளராதா என்பதிலேயே நமது ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன.
Questions to ‘superstar’ Rajinikanth
20 Questions that we all want to know answers from Rajinikanth, who wants to enter the politics of Tamilnadu and become a leader here.
1. How are you going to fund your Political party? If you are receiving/going to receive any external funding who will it be from?
2. Will any of your family members be involved with your political party?
3. How exactly do you propose to change the system which you say has become rotten? What are your specific plans for changing the system?
4. What are your views on issues like Cauvery,Mullaiperiyar, Fishermen,NEET etc.,issues that confront the State?
5. Who are your advisors guiding you and who are going to be your key associates in your political journey?
6. Is your political party going to be a secular one?
7. What is your view on the BJP and their vision of Hindutva?
8. What will be the role of your Fans Associations and their office bearers in your political Party? Will they be office bearers in your party too?
9. Are you ruling out alliances with existing parties? If you are not, then what kind of parties would you enter into an alliance with?
10. Will you stop acting now that you are entering politics? Will you be a full time politician?
11. Will you accept politicians from other parties (those parties that you say have spoiled the system) into your party?
12. What is your response to those who say only a Tamilian by birth should rule Tamil Nadu?
13.How good is your health? Can you assure the people that, to your knowledge, your health will permit you this challenging battle?
14. Will you clarify the details regarding all the existing Court Cases against members of your family?
15. Will you proactively publish the list of your assets at the start of your political journey? You have said that combating corruption is your primary political plank.
16. What are your economic beliefs? Do you support a larger role for Government or do you back Privatization?
17. How will you deal with your fans who may want a return on the investments they make in politics? Do you seriously believe that all your fans are motivated only by altruistic and noble motives in supporting your party?
18. Will you reach out to Kamal Haasan and invite him to join you in your political journey?
19. When will you start meeting the people and touring the State?
20.In what time frame can the public get answers to the above 19 Questions?
எட்டு மாயைகள்
The 8 Illusions Keeping You from Happiness and Success
1. The feeling of not having enough time to do the things you want to do
2. Trying to take shortcuts in life
3. Thinking that you have control over life
4. Waiting for happiness from an external factor
5. Attempting to control other people
6. Waiting for a source of inspiration or energy
7. Believing that failure is a final and undesirable stage
8. Feeling that you are not good enough to succeed
–From: Sadat Khan’s Discover Yourself
Though all these points can be elaborated, I leave that for your own imagination. (Poornachandran)
நல்லவை நிகழட்டும்
சென்றவை சென்றன. வருபவை வந்தே தீரும். நடப்பவையும் வருபவையும் இவ்வாண்டு 2018இல் நல்லவையாக அமையட்டும்.
மீத்தேன் என்னும் நஞ்சு
முற்றிலும் பாலைவனமாய் மாறப்போகும் தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டம்
அதோடு சேர்ந்து பாதிக்கபடப்போகும் மாவட்டங்கள் திருவாரூர், நாகை
இன்னும் வேலூர் மாவட்டத்திலும் இராணிப்பேட்டை அருகே இலாலாப்பேட்டை முதலிய இடங்களில் மீதேன் எரிவாயு பெற ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
எங்கேயோ போடப்போகும் ஆழ்துளைக் கிணறுதானே நமக்கு என்ன வந்தது என்று எண்ண வேண்டாம் நண்பர்களே,
1.நிலத்தடியில் சுமார் 6000 அடி ஆழத்தில் நிலக்கரியோடு இருக்கும் மீத்தேனை எடுக்க
நிலக்கரி இருக்கும் மட்டம்வரை நிலக்கரிப் படிவத்தில் இருக்கும் நீரை இறைக்கவேண்டும்.
2.கடும் உப்பும், பிற மாசுகளும் நிறைந்த இந்த நீர், நிலத்தில் வாழும்
தாவர உயிரியல் மற்றும் நுண்ணுயிர்களைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது.
3.அதோடு நிலம் சுடுகாடாய் மாறும்.
4.கடல் நீர் உள் நுழையும்.
5.நிலம் சுமார் 20 அடிகளுக்கு உள்வாங்கும்.
6.கட்டிடங்கள், பாலங்கள், ஆற்றுக்கரைகள் , கோயில்கள் சிதையும். நிலநடுக்கங்கள் ஏற்படும்.
7.குடிநீர் , பாசன நீர் தரும் நிலத்தடி நீர்பிடிப்புகள் வற்றிப்போகும்.
8.மீதம் இருக்கின்ற நீர்நிலைகளிலும் ஆழ்துளை குழாய் இடப் பயன்படுத்திய ரசாயனங்கள்,
மீத்தேன் ஆகியவை கலக்கும். இச்செயல் முறை மண்ணையும் நீரையும் நஞ்சாக்கி நிரந்தரமாக
நாசம் செய்யும்.
தஞ்சையில் ஒப்பந்தம் போட்டிருக்கும் ஜி.இ.இ.சி கம்பெனிக்கு கொடுக்கபோகும் இடம் 691 சதுர
கிலோமீட்டர். ஆனால் பாதிப்பு ஏற்படபோகும் மூன்று மாவட்டங்களின் பரப்பளவு 8270 சதுர கிலோமீட்டர், அதாவது 21 லட்சம் ஏக்கர் நிலங்களை நாசம் செய்யும்.
மொத்த ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை 2000.
அடுத்த கட்டமாய் பாதிக்கப் போகும் மாவட்டங்கள் வேலூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கடலூர் தான். இதனால் காற்றும் மாசுபடப் போவதால் அது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பாதிக்கப்போகும்
கொடிய அரக்கன் என்பதே நிதர்சனம். ஒட்டுமொத்தமாக இப்போதைக்குத் தஞ்சை புதுக்கோட்டையின்
பகுதி பாலைவனமாய் மாறப் போவதால் எத்தனையோ லட்சம் மக்களின் வாழ்க்கை கேள்விக் குறியாய் நிற்கிறது. தற்போது ஆங்காங்கே நடைபெறும் போராட்டம் காரணமாய் அரசு தற்காலிகமாய்
நிறுத்தி வைத்துள்ளது.இந்த ஒப்பந்தம் மீண்டும் தொடர்ந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற
இயலாது. அதற்கு முன் மக்கள் விழித்தெழ வேண்டியது மிக அவசியம், அவசரமும் கூட.
ஏழை அம்மா
ஏழை ஜெயலலிதா போய் ஒரு வருடம் ஆகி விட்டது.
அவரால் தன்னுடன் எதையுமே எடுத்துச் செல்ல முடியவில்லை.
ஆம். சர்வ வல்லமை பொருந்திய அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்.
இன்று வெறும் நமது நினைவுகளில் மட்டுமே இருக்கிறார்.
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
என்று ஒரு ஆறடி மண்ணில் புதைக்கப்பட்டு மறைந்து விட்டார்.
எந்த வழியிலோ சம்பாதித்த செல்வங்களை யாரோ அனுபவிப்பதற்காக விட்டு விட்டுச்சென்று விட்டார்.
[ 1197 ஏக்கர் நிலம் திருநெல்வேலியில்,
200 ஏக்கர் வாலாஜாப்பேட்டையில்,
100 ஏக்கர் ஊத்துக்கோட்டையில்,
25 ஏக்கர் சிறுதாவூரில்,
300 ஏக்கர் காஞ்சீபுரத்தில்,
14.5 ஏக்கர் திராட்சைப் தோட்டம் – ஜீடிமெட்லா (ஆந்திராவில்),
1600 ஏக்கர் தேயிலைத் தோட்டம்
ஒரு பங்களாவுடன் கொடநாடு, நீலகிரி மலையில்.
இவை தவிர சென்னையில் போயஸ் தோட்டத்தில் 24,000 சதுர அடியில் கட்டப்பட்ட 100 கோடி மதிப்புள்ள (வேதா நிலையம்) பங்களா,
4 வணிக வளாகங்கள்,
800 கிலோ வெள்ளி,
28 கிலோ தங்கம்,
750 ஜோடி காலணிகள்,
10,500 புடவைகள்,
91 விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள்,
இவை தவிர பல வாகனங்கள், சொகுசு கார்கள்.
(இந்தக் கணக்கில் பினாமி சொத்துக்கள் சேரவில்லை.) ]
யாராலுமே தடுத்து நிறுத்த முடியாத ஒரு பயணம் நம் எல்லோருக்கும் காத்திருக்கிறது.
இந்த வாழ்க்கைப் பயணத்தில் நாம் வெறும் பயணிகள் தான். அவரவர் தாம் எங்கே இறங்க வேண்டுமோ அங்கே இறங்கித்தான் ஆகவேண்டும். ஆகையால்:
அகந்தையை ஒழித்திடுவோம், நாம் யார் என்பதை உணர முயற்சி செய்வோம், வாழும் கடைசி நிமிடம் வரை நல்லவர்களாக அடுத்தவர்களை மதித்துப் பயனுற வாழ்வோம்.
Before marriage and After marriage
A Husband and Wife are talking just before their marriage, like this:
Husband: At last! I can hardly wait!
Wife: Do you want me to leave?
Husband: No! Don’t even think that.
Wife: Do you love me?
Husband: Of course! Always have and always will!
Wife: Have you ever cheated on me?
Husband: No! Why are you even asking?
Wife: Will you kiss me?
Husband: Every chance I get!
Wife: Will you hit me?
Husband: Hell no! Are you crazy?!
Wife: Can I trust you?
Husband: Yes.
Wife: Oh my Darling!
After marriage their life has changed. Now they speak like this – Just start from below (Oh my Darling!) and go up.
(Taken from a foreign magazine)
Youth and Age, by S. T. Coleridge
Youth and Age
Verse, a breeze mid blossoms straying,
Where Hope clung feeding, like a bee—
Both were mine! Life went a-maying
With Nature, Hope, and Poesy,
When I was young!
When I was young?—Ah, woful When!
Ah! for the change ‘twixt Now and Then!
This breathing house not built with hands,
This body that does me grievous wrong,
O’er aery cliffs and glittering sands,
How lightly then it flashed along:—
Like those trim skiffs, unknown of yore,
On winding lakes and rivers wide,
That ask no aid of sail or oar,
That fear no spite of wind or tide!
Nought cared this body for wind or weather
When Youth and I lived in’t together.
Flowers are lovely; Love is flower-like;
Friendship is a sheltering tree;
O! the joys, that came down shower-like,
Of Friendship, Love, and Liberty,
Ere I was old!
Ere I was old? Ah woful Ere,
Which tells me, Youth’s no longer here!
O Youth! for years so many and sweet,
‘Tis known, that Thou and I were one,
I’ll think it but a fond conceit—
It cannot be that Thou art gone!
Thy vesper-bell hath not yet toll’d:—
And thou wert aye a masker bold!
What strange disguise hast now put on,
To make believe, that thou are gone?
I see these locks in silvery slips,
This drooping gait, this altered size:
But Spring-tide blossoms on thy lips,
And tears take sunshine from thine eyes!
Life is but thought: so think I will
That Youth and I are house-mates still.
Dew-drops are the gems of morning,
But the tears of mournful eve!
Where no hope is, life’s a warning
That only serves to make us grieve,
When we are old:
That only serves to make us grieve
With oft and tedious taking-leave,
Like some poor nigh-related guest,
That may not rudely be dismist;
Yet hath outstay’d his welcome while,
And tells the jest without the smile.