“ஸ்கூல் ஃபீஸ் ஒரு லட்சம் கட்டிடுங்க.”
“ஓகே சார்.”
“யூனிஃபாரத்துக்கு ஒரு ரெண்டாயிரம்.”
“ஓகே சார்.”
“ஷூ இங்கேயே கொடுத்துவிடுவோம். அதுக்கு ஒரு ஆயிரம் ரூபாய்.”
“சரிங்க சார்.”
“பஸ்ஸுக்கு ஒரு இருபதாயிரம்.”
“ஓகே சார்.”
“ஸ்டேஷனரி, நோட்புக்குக்குப் பத்தாயிரம்.”
“சரிங்க சார்.”
“மதியச் சாப்பாடு நாங்களே ஏற்பாடு செய்வோம். அதற்கு ஒரு இருபதாயிரம்.”
“ஓகே சார்.”
“உங்க பையன் எல்கேஜி முதல் காலேஜ் வரை இங்கே எங்க நிறுவனங்கள்ல தான். நாங்க சொல்ற பொருளைத்தான் பயன்படுத்தணும்.”
“சரி சார், படிப்பை முடிச்ச பிறகு?”
“படிப்பை முடிச்சுட்டா எங்கே வேல கெடைக்குது? அதனால நம்ம ஸ்கூல்லயே மூவாயிரம் ரூபாய் சம்பளத்திலே வேலைபோட்டுத் தருவோம். அல்ரெடி இங்க இருக்கிறவங்க எல்லாம் இப்படி வந்தவங்கதான்.”
????
-ஒரு வாட்சப் பதிவிலிருந்து