மீத்தேன் என்னும் நஞ்சு

முற்றிலும் பாலைவனமாய் மாறப்போகும் தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டம்
அதோடு சேர்ந்து பாதிக்கபடப்போகும் மாவட்டங்கள் திருவாரூர், நாகை
இன்னும் வேலூர் மாவட்டத்திலும் இராணிப்பேட்டை அருகே இலாலாப்பேட்டை முதலிய இடங்களில் மீதேன் எரிவாயு பெற ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
எங்கேயோ போடப்போகும் ஆழ்துளைக் கிணறுதானே நமக்கு என்ன வந்தது என்று எண்ண வேண்டாம் நண்பர்களே,
1.நிலத்தடியில் சுமார் 6000 அடி ஆழத்தில் நிலக்கரியோடு இருக்கும் மீத்தேனை எடுக்க
நிலக்கரி இருக்கும் மட்டம்வரை நிலக்கரிப் படிவத்தில் இருக்கும் நீரை இறைக்கவேண்டும்.
2.கடும் உப்பும், பிற மாசுகளும் நிறைந்த இந்த நீர், நிலத்தில் வாழும்
தாவர உயிரியல் மற்றும் நுண்ணுயிர்களைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது.
3.அதோடு நிலம் சுடுகாடாய் மாறும்.
4.கடல் நீர் உள் நுழையும்.
5.நிலம் சுமார் 20 அடிகளுக்கு உள்வாங்கும்.
6.கட்டிடங்கள், பாலங்கள், ஆற்றுக்கரைகள் , கோயில்கள் சிதையும். நிலநடுக்கங்கள் ஏற்படும்.
7.குடிநீர் , பாசன நீர் தரும் நிலத்தடி நீர்பிடிப்புகள் வற்றிப்போகும்.
8.மீதம் இருக்கின்ற நீர்நிலைகளிலும் ஆழ்துளை குழாய் இடப் பயன்படுத்திய ரசாயனங்கள்,
மீத்தேன் ஆகியவை கலக்கும். இச்செயல் முறை மண்ணையும் நீரையும் நஞ்சாக்கி நிரந்தரமாக
நாசம் செய்யும்.
தஞ்சையில் ஒப்பந்தம் போட்டிருக்கும் ஜி.இ.இ.சி கம்பெனிக்கு கொடுக்கபோகும் இடம் 691 சதுர
கிலோமீட்டர். ஆனால் பாதிப்பு ஏற்படபோகும் மூன்று மாவட்டங்களின் பரப்பளவு 8270 சதுர கிலோமீட்டர், அதாவது 21 லட்சம் ஏக்கர் நிலங்களை நாசம் செய்யும்.
மொத்த ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை 2000.
அடுத்த கட்டமாய் பாதிக்கப் போகும் மாவட்டங்கள் வேலூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கடலூர் தான். இதனால் காற்றும் மாசுபடப் போவதால் அது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பாதிக்கப்போகும்
கொடிய அரக்கன் என்பதே நிதர்சனம். ஒட்டுமொத்தமாக இப்போதைக்குத் தஞ்சை புதுக்கோட்டையின்
பகுதி பாலைவனமாய் மாறப் போவதால் எத்தனையோ லட்சம் மக்களின் வாழ்க்கை கேள்விக் குறியாய் நிற்கிறது. தற்போது ஆங்காங்கே நடைபெறும் போராட்டம் காரணமாய் அரசு தற்காலிகமாய்
நிறுத்தி வைத்துள்ளது.இந்த ஒப்பந்தம் மீண்டும் தொடர்ந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற
இயலாது. அதற்கு முன் மக்கள் விழித்தெழ வேண்டியது மிக அவசியம், அவசரமும் கூட.


ஏழை அம்மா

ஏழை ஜெயலலிதா போய் ஒரு வருடம் ஆகி விட்டது.
அவரால் தன்னுடன் எதையுமே எடுத்துச் செல்ல முடியவில்லை.
ஆம். சர்வ வல்லமை பொருந்திய அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்.
இன்று வெறும் நமது நினைவுகளில் மட்டுமே இருக்கிறார்.
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
என்று ஒரு ஆறடி மண்ணில் புதைக்கப்பட்டு மறைந்து விட்டார்.
எந்த வழியிலோ சம்பாதித்த செல்வங்களை யாரோ அனுபவிப்பதற்காக விட்டு விட்டுச்சென்று விட்டார்.
[ 1197 ஏக்கர் நிலம் திருநெல்வேலியில்,
200 ஏக்கர் வாலாஜாப்பேட்டையில்,
100 ஏக்கர் ஊத்துக்கோட்டையில்,
25 ஏக்கர் சிறுதாவூரில்,
300 ஏக்கர் காஞ்சீபுரத்தில்,
14.5 ஏக்கர் திராட்சைப் தோட்டம் – ஜீடிமெட்லா (ஆந்திராவில்),
1600 ஏக்கர் தேயிலைத் தோட்டம்
ஒரு பங்களாவுடன் கொடநாடு, நீலகிரி மலையில்.
இவை தவிர சென்னையில் போயஸ் தோட்டத்தில் 24,000 சதுர அடியில் கட்டப்பட்ட 100 கோடி மதிப்புள்ள (வேதா நிலையம்) பங்களா,
4 வணிக வளாகங்கள்,
800 கிலோ வெள்ளி,
28 கிலோ தங்கம்,
750 ஜோடி காலணிகள்,
10,500 புடவைகள்,
91 விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள்,
இவை தவிர பல வாகனங்கள், சொகுசு கார்கள்.
(இந்தக் கணக்கில் பினாமி சொத்துக்கள் சேரவில்லை.) ]

யாராலுமே தடுத்து நிறுத்த முடியாத ஒரு பயணம் நம் எல்லோருக்கும் காத்திருக்கிறது.

இந்த வாழ்க்கைப் பயணத்தில் நாம் வெறும் பயணிகள் தான். அவரவர் தாம் எங்கே இறங்க வேண்டுமோ அங்கே இறங்கித்தான் ஆகவேண்டும். ஆகையால்:

அகந்தையை ஒழித்திடுவோம், நாம் யார் என்பதை உணர முயற்சி செய்வோம், வாழும் கடைசி நிமிடம் வரை நல்லவர்களாக அடுத்தவர்களை மதித்துப் பயனுற வாழ்வோம்.