வள்ளலாரும் பழந்தமிழ் இலக்கியமும்

vallalaar4

முன்பு ஒரு கட்டுரையில் தமிழனுக்குத் தாழ்வு மனப்பான்மை அதிகம் என்று குறிப்பிட்டிருந்தேன். தாழ்வு மனப்பான்மையின் ஒரு கூறுதன் ஆற்றலை உணராமல்பிறரை (தன்னைவிட ஆற்றலில் குறைந்தவர்களைக்கூட) மிகவும் போற்றுவதும் அவர்களுக்குப் பயப்படுவதும் ஆகும். இதற்கு இங்கு மத உதாரணங்கள் சிலவற்றைச் சொல்லலாம். தமிழனுக்குத் தன் நாட்டுச் “சாமி”கள் (தெய்வங்கள்) பிடிப்பதில்லை. என்னதான் பழந்தமிழ்ச் சாமியாக இருந்தாலும் இப்போது ஆந்திரத்திலிருக்கும் வேங்கடாசலபதியும்கேரளத்தின் ஐயப்பனும்மற்றும் பண்டரிபுரத்து பகவானும்காசி விசுவநாதனும்தான் வேண்டியவர்கள். இவர்களுக்காக வருடா வருடம் படையெடுப்பதன்றி தாங்கள் உழைத்துச் சேர்த்த செல்வத்தையும் அர்ப்பணிப்பார்கள்.

ஞானிகளைப் பாராட்டுவதிலும் அப்படித்தான். இராமகிருஷ்ண பரமஹம்சருக்குத் தமிழ்நாட்டில் எத்தனை எத்தனை மடங்கள்வள்ளலாருக்கு அவர் பிறந்த தென்ஆர்க்காட்டு மண்ணுக்கு அப்பால் எங்கேனும் நிறுவனங்கள் உண்டாசாயிபாபா என்ற வடநாட்டு மகானுக்கு எத்தனை கோயில்கள்எந்தப் புதிய நகர்‘, ‘காலனி‘ உருவானாலும் அங்கே ஒரு சாயிபாபா கோயில் வந்துவிடுகிறது. அவரைவிட மேம்பட்ட தத்துவங்களை போதித்த வள்ளலாருக்கு எங்கேயாவது கோயில்கள் உண்டாகேட்டால்சாயிபாபா பகவானின் அவதாரம்,வள்ளலார் ஒரு மனிதர் என்று நம் தாழ்வு மனப்பான்மை கூறிவிடும். இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து நம் தாழ்வு மனப்பான்மையின் அளவைச் சோதித்துக் கொள்ளுங்கள்.

ஆழ்வார்நாயன்மார் வரிசையில் தமிழ்நாட்டில் கடைசியாகத் தோன்றிய ஞானி இராமலிங்க அடிகளார். வெறும்

ஆன்மிகவாதி மட்டுமல்லதத்துவஞானி. அவரே கூறுவதுபோல வாழையடி வாழையென வந்த ஆன்மிக அறிஞர்களின் வரிசையில் ஒருவர். அவருடைய தத்துவம்வழக்கமான சைவ சித்தாந்தத் தத்துவம் அன்று. அவருடைய வாழ்க்கைதான் அவருடைய தத்துவம். அன்புநேர்மை, தூய்மைஆன்ம நேயம்கடவுள் தன்மை ஆகிய அனைத்தின் உருவமாகவும் வாழ்ந்தவர்.

சென்னையில் தியசாபிகல் சொசைட்டி ஏற்படுத்திய கர்னல் ஆல்காட்மேடம் பிளவாட்ஸ்கிலெட்பீட்டர்அன்னீ பெசண்ட் போன்றவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்திய ஆன்மிக மறுமலர்ச்சியின் ஒரு பகுதி என்பார்கள். இவர்கள் எல்லாம் இராமலிங்க அடிகளாருக்குப் பின்னவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்திய ஆன்மிக இயக்கத்துக்குத் தமிழ்நாட்டின் ஒரே பிரதிநிதியாகத் திகழ்பவர் அடிகளார்தான். தியசாபிகல் சொசைட்டிக்கு முன்னோடியும் அவர்தான் என்று மேடம் பிளவாட்ஸ்கி குறிப்பிடுகின்றார் (அந்தக் கழகத்தின் இதழான தியாசபிஸ்ட் என்பதில், 1882 ஜூலை இதழில்.) ஆனால் தமிழ்நாட்டில்அதுவும் பிள்ளைமார் சாதியில் பிறந்ததனாலோ என்னவோ இராமகிருஷ்ணரைசாயிபாபாவைப் போற்றிய இங்குள்ள பார்ப்பனர்கள்,இராமலிங்கரைப் போற்றவுமில்லைபிற மாநிலத்தவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தவுமில்லை. அப்படிச் செய்ய அவர்களின் சாதிப் பெருமை இடந்தரவில்லை. இராமலிங்கர் புகழும் பரவவேண்டிய அளவுக்குப் பரவ வில்லை. இக்கட்டுரையின் நோக்கம் அது அல்ல. இராமலிங்கரின் கோட்பாடுகள் யாவும் பழந்தமிழ் மக்களின் கோட்பாடு என்பதை வலியுறுத்துவதே இங்கு நோக்கம்.

அடிகளார் தமக்கெனத் தனியானதோர் கொள்கையை உருவாக்கியவர் என்று

சொல்ல இயலாது. தமிழில் பெரும்புலமையும் பழந்தமிழ் இலக்கியங்களில் ஞானமும் வாய்த்த அடிகளார்பழந்தமிழ்க் கொள்கையைத்தான் சமரச சன்மார்க்கம்ஆன்ம நேய ஒருமைப்பாடு என்றெல்லாம் பெயரிட்டு அழைத்தார். சன்மார்க்கம் என்ற சொல் முதன்முதலில் திருமூலரின் திருமந்திர நூலில் வருகிறது. தாயுமானவரும் அந்தச் சொல்லைப் பயன்படுத்துகின்றார்.

தம்முடைய தத்துவத்தை இராமலிங்க அடிகளார் இப்படிச் சொல்கிறார்: “என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்இயற்கைத் தொன்மையாம் சன்மார்க்கம்ஆனந்த சமரச சன்மார்க்கம்.” உலகிலுள்ள தாவரங்கள் விலங்குகள் உள்ளிட்ட எல்லா உயிரினங்கள்மீதும் அன்பு செலுத்துவதுதான் சன்மார்க்கம்.

அடிகளாரின் சமரச சன்மார்க்கம் என்னும் முழுத்தூய அன்புசமணம்பௌத்தம் ஆகிய மதங்களின் அன்புநெறியை ஒட்டியது. நம் பாடப்புத்தக மனப்பாடப் புலிகளைக் கேட்டால் அகிம்சை என்ற கொள்கையை காந்தியடிகள் உருவாக்கினார் என்பார்கள். கிறித்துவத்திற்கும் ஐந்து நூற்றாண்டுகள் முன்பு தோன்றிய சமண மதத்தின் அடிப்படைக் கொள்கையே அகிம்சைதான். எந்த உயிரையும் கொல்லவோஅதற்குத் தீங்கிழைக்கவோ கூடாது என்பது சமணத்தின் கொள்கை. பௌத்தமோஉலகத்தின்மீதுள்ள பற்றும் பாசமும்தான் துன்பத்தை அளிக்கின்றனஎனவே அவற்றைத் துறக்கவேண்டும் என்கிறது. அதற்காகச் சரியான நெறியைப் பின்பற்ற வேண்டும் என்கிறது. இரண்டு மதங்களுமே துறவை முதன்மையாக வலியுறுத்திய காரணத்தால் அவற்றின் கொள்கை வாழ்க்கையில் செயல்படுத்தக்கூடிய கருணையாகவும் அன்பாகவும் அமையவில்லை,வாழ்க்கையிலிருந்து ஒதுங்கியவர்களின் கருணை என்பதாகவே இருந்தது.

அதனால் துறவிகளின் மனத்தளவிலான கருணைக்கும் அன்புக்கும் வலிமை இல்லை என்பதல்ல. அதனால் ஏற்படுகின்ற ஆன்மிக சக்தி வலுவானது என்றுதான் நூல்கள் சொல்கின்றன. புத்தரின் அற்புத சக்திக்குக் காரணம் அதுதான் என்பார்கள். அவருடைய அற்புத ஆற்றல் மனிதர்களை மட்டுமல்லஅவர் எதிர்ப்பட்ட விலங்குகளையும் ஈர்த்தது என்பார்கள்.

வள்ளலார் கண்ட சன்மார்க்கம்சமணத்தின் அகிம்சையையும்பௌத்தத்தின் பேரன்பையும் அன்றி அதற்கும் மேலான தன்மைகளை உள்ளடக்கியிருக்கிறது. இந்த மேலான தன்மைகள் என்பவைபழங்காலத்திலிருந்து தமிழ் மண்ணுக்கே உரியனவாக அமைந்தவை.

மற்றவர்களுக்காகவே மனிதர்கள் வாழ்வதனால் தான்சமூகத்திற்காக எதையும் தியாகம் செய்யும் கருணை படைத்தவர்கள் இருப்பதனால்தான் உலகம் இருக்கிறது என்பது பழந்தமிழ்க் கொள்கை. புறநானூற்றின் 182ஆம் பாடல் இதனைத் தெளிவாகச் சொல்கிறது. உண்டாலம்ம இவ்வுலகம்….எனத் தொடங்கும் அக்கவிதை, “தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென பிறர்க்கென முயலுநர் உண்மையானேஇவ்வுலகம் உண்டால் அம்ம” என்கிறது. அதாவது தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்கள் இருப்பதனால்தான் இந்த உலகம் இருக்கிறது என்பது பொருள்.

(ஆனால் பிறருக்காக வாழ்வது என்பது தொல்லை தரும் கொள்கை. காந்தியடிகளின் இப்படிப்பட்ட வாழ்க்கை,இந்துக்களுக்கு இழப்பாகவும், முஸ்லிம்களுக்கு ஆதாயமாகவும் அமைந்தது. பழந்தமிழரின் இப்படிப்பட்ட வாழ்க்கைவந்தவர்களை வாழ வைத்தல் என்ற பெயரால் எல்லாருக்கும் அடிமைப்பட வைத்தது. தனிமனிதக் கொள்கை சமூகக் கொள்கையாக உதவுவதில்லை. இதனைத் தெளிவாக உணர்ந்ததனால்தான் போலும்,தனிமனிதக் கொள்கையில்                  கொல்லாமையை வலியுறுத்தும் வள்ளுவர்சமூகக் கொள்கையில் தீயவர்களைக் களையெடுப்பதுபோல் நீக்க வேண்டும் என்கிறார்.)

பழங்காலத்தில் தமிழர் தாவரங்கள்விலங்குகள் மீதும் பேரன்பு செலுத்தினர் என்பதைப் பாரி முல்லைக்குத் தேர் கொடுத்த நிகழ்ச்சியும்பேகன் மயிலுக்குப் போர்வை தந்த நிகழ்ச்சியும் நிரூபிக்கின்றன. இந்த வகையான அன்பைத்தான் வள்ளலாரும் வலியுறுத்துகின்றார். இன்றைக்கு இயற்கையே அழிக்கப்பட்டு உலகத்தின் சுற்றுச்சூழல் பாழாகின்ற நிலையில் நமக்கு உடனடித் தேவையும் இந்த வகையான அன்புதான்.

       எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே எண்ணி நல்லின்புறச் செயவும்

       அவ்வுயிர்களுக்கு வரும் இடையூற்றை அகற்றியே அச்சம் நீக்கிடவும்

       செவ்வையுற்றுனது திருப்பதம் பாடிச் சிவசிவ என்று கூத்தாடி

       ஒவ்வுறு களிப்பால் அழிவுறாதிங்கே ஓங்கவும் இச்சைகாண் எந்தாய். (6-20-18)

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோறு இரந்தும் பசி அறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்

நீடிய பிணியினால் வருந்துகின்றோர் என் நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்

ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்

(6-21-58)

அவர் எழுதிய சீவகாருண்ய ஒழுக்கம் என்னும் நூலின் கருத்துகள் ஆன்மிகத்தின் முதற்படியாக அமைகின்றன. சீவ காருண்யம் என்றால்எல்லா உயிர்களின்மீதும் காட்டும் கருணை என்று பொருள்.

ஆன்மிக சாதனை புரிபவனின் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி இராமலிங்கஅடிகளார் தமது பாக்களில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். சுத்ததேகம்பொன்னுருவம்அன்புருவம்அருளுருவம்இன்புருவம் என்றெல்லாம் அதைச் சொல்கிறார். அவரவரின் ஆன்மிக பலத்துக்கேற்ப இவை வாய்க்கின்றன என்று அடிகளார் கருதுகிறார் போலும். இந்த ஆன்மிக பலத்தைச் சோதிப்பதற்கு அவர் குளிகையொன்று செய்துவைத்திருந்ததாகச் சொல்கிறார்கள். அந்தக் குளிகையை ஆன்ம பலமற்றவர் கையில் கொண்டால் தாங்க முடியாத வெப்பத்தை உண்டு பண்ணும். ஆன்மிக சக்தியுள்ளவர்கள் கையில் ஏந்தினால் அவரவர் ஆன்மிக பலத்துக்கேற்ப எவ்வளவு நேரம் முடிகிறதோ அவ்வளவு நேரம் தாங்கமுடியும். சாதாரணமாக அதைத் திருநீற்றில் வைத்திருப்பார்கள் என்றும் அவரது சீடர்கள் கையில் அதைக் கண்டதாகவும் அடிகளாரின் வரலாற்றாசிரியர் வேலாயு முதலியார் குறிப்பிடுகிறார்.

(ஆனால் நாம் சிந்தனைகளுக்கும் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் தரவேண்டுமே ஒழியஇம்மாதிரி அற்புதச் செயல்களில் கருத்தைச் செலுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை தேவை. இன்றும் வள்ளலார் நீரில் விளக்கெரித்தார் என்றும்பல இடங்களில் ஒரே சமயத்தில் தோன்றினார் என்றும் அற்புதச் செயல்களைப் பாராட்டுபவர் இருக்கிறார்கள். அற்புதச் செயல்களில் ஈடுபட்டுஅதற்காக பக்தி செலுத்துவது பாமரமனம். இதில் தனக்கு மேலான ஒன்றின் பேரில் ஏற்படும் பயமும் வியப்பு உணர்ச்சியும் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. கொள்கையை ஏற்று அதைக் கடைப்பிடிப்பதுதான் உயர்ந்தநிலை.)

அடிகள் கண்ட அருட்பெருஞ்சோதி என்ற கருத்தும் பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ளதுதான். திருமுருகாற்றுப்படையின் தொடக்கத்தில்,

       உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு

       பலர் புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு

       ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர் ஒளி

என்ற அற்புத அடிகள் வருகின்றன.

இறைவனின் ஓயாது வழங்கும் ஒளியை அவிர் ஒளி என்கிறார் நக்கீரர். இதனைத் தான் அருட்பெரும் சோதி என்று ஏற்றுக்கொண்டார் வள்ளலார்.

ஞாயிறு கடல்நீரை ஆவியாக்கிஉவர்நீரை (உப்புநீக்கி) உண்ணும் நீர் ஆக்கி மழையாகத் தருகிறது. அந்தச் சமயத்தில் அதன் நீர்ம(திரவ) வடிவமும் மாறி ஆவி வடிவமாகிறது. அதுபோல இறைவனின் அருட்பெரும் சோதிஇந்த மனித உடலின் உவர்ப்பை (கெட்ட தன்மைகளை) நீக்கிநீரை ஆவியாக்குவதுபோல் பௌதிக திட இருப்பை நீக்கிச் சுத்ததேகம் ஆக்குகிறது என்பது வள்ளலாரின் கருத்தாகத் தோன்றுகிறது.

திருமுருகாற்றுப்படையின் இறுதிப்பகுதியில் வரும் இந்த அடிகளும் நோக்கத் தக்கவை. திருமுருகாற்றுப்படை,ஓர் ஆன்மிகப் பரிசிலன் இறைவனிடம் பரிசில் வேண்டிச் செல்வதாக அமைகின்ற நூல்.

       இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்துஒரு நீயாகித் தோன்ற

       விழுமிய பெறல் அரும் பரிசில் நல்குமதி

என்பது அந்தப் பரிசிலன் இறைவனிடம் கேட்கும் பரிசு.

வள்ளலார் கூறிய ஆன்மநேயம் என்ற கருத்து இதுதான். திருமுருகாற்றுப்படையின் இந்தப்பகுதியில்இந்த முழு உலகமாகவும் தான் ஆக வேண்டுமென ஆன்மிகப் பரிசிலன் வேண்டுகிறான். (ஒரு நீயாகித் தோன்றுவது என்றால்உன்னைப் போலவே நானும் முழு உலகமாகவும் ஆகவேண்டும் என்று அர்த்தம்.) முழு உலகமாகவும் ஒருவன் ஆகுதலே சாகா வரமல்லவாஇதனைத்தான் மரணமிலாப் பெருவாழ்வு என்று அடிகளார் உரைக்கின்றார்.

இவ்வாறுவள்ளலாரின் அனைத்துக் கருத்துகளும் தத்துவங்களும் பழந்தமிழ் வாழ்க்கையிலிருந்தும்,இலக்கியங்களிலிருந்தும் பெறப்பட்டவை என்பதை நாம் காண இயலும். தமிழ்நாட்டின் தனிப்பெரும் ஞானியான வள்ளலார் தமது தத்துவத்தைத் தனியாக எழுதிவைக்கவில்லை. அவை திருவருட்பாவின் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பாக்களில், 40000 செய்யுளடிகளில் பொதிந்து கிடக்கின்றன. மேலும் அவருடைய உரைகளிலும் சீடர்களுடன் அவர் உரையாடிய பேச்சுகளிலும் அவை உள்ளன. அவற்றைக் கண்டறிந்து திறமாக வெளிப்படுத்துவது கற்றறிந்தோர் கடமையாகும்.


தமிழ் நாகரிகத்தின் எதிர்காலம்

thamil-naagarigam5

தமிழ் நாகரிகத்தின் எதிர்காலம் பற்றிப் பலர் கவலையோடும் அக்கறையோடும் விவாதிக்கிறார்கள். பொதுவாக நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய பல விடயங்களை அவர்கள் சொல்லவும் செய்கிறார்கள். அவற்றைப் பகுத்துப்பார்த்தால்பெரும்பாலும்

1. உலக/ இந்திய நாகரிகத்திற்குத் தமிழகத்தின் பங்கு ஏற்றுக்கொள்ளப்படாத நிலை

2. இந்தியாவில் தேசிய நலனுக்கு உகந்த கூட்டாட்சிகள் அமையாத நிலை-தமிழ்த் தேசியம் உருவாகாத நிலை

3. ஆங்கிலத்தின் ஆதிக்கம்/ அதன் பின்னணியிலுள்ள உலகமயமாக்கல்

4. செம்மொழிப் பிரச்சினை

5. ஆதிக்கத்தை எதிர்க்கும் அரசியலும் அதனோடு இணைந்த தமிழ்மேம்பாடும்

என்ற பொருள்களில் அடங்குகின்றன.

சிலருக்கு தமிழனுக்கு இனவுணர்வில்லையே என்ற கவலை காணப்படுகிறது. ஆனால் அவர்களிடம் ஒருசில தவறான புரிந்துகொள்ளல்களும் கட்சிச் சார்புகளும் இருக்கின்றன. உதாரணமாக இன்றைய ஆட்சிக்கு முந்திய ஆட்சி தமிழகத்தில் அமைந்தபோதுஒருவர்தமிழ்ப்பகைவர்களின் கையிலிருந்து கேள்‘ (நண்பர்)களின் கைகளுக்கு ஆட்சி மாறியிருக்கிறது என்றார். தமிழ்ப்பகைவர்கேளிர் என்பதை மிகவும் சுருக்கிப் பார்க்கும் தன்மை இது. இக் கேள்களின் ஆட்சியில்தான் என்றைக் குமே தமிழை வீழ்த்தி ஆங்கிலம் மேன்மைபெற வழிவகுக்கப்பட்டது என்பதையும்உலகமயமாக்கல் தமிழகத்தில் விரிவுபெறப் பாதைகள் திறந்துவிடப்பட்டன என்பதையும் மறந்துவிடுகிறார்கள் இவர்கள். அழிக்கும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி பெரியது என்ற ஆராய்ச்சி தேவையில்லை.

என்னைப் பொறுத்தவரை இத்தனை கேள்விகள் தேவையில்லை. அடிப்படைப் பிரச்சினைகள் மூன்றுதான்.

1. தமிழனின் இனவுணர்வின்மையும் தனது நாகரிகம் பற்றி அறியாமையும்.

2. இன்றைய தமிழ்க் கல்வித்துறைஇலக்கியத் துறைகளின் போக்கு.

3. அமெரிக்காவின் ஆதிக்கப்போக்கும்அதற்குக் கருவியாக இருக்கின்ற உலகமயமாக்கமும் அதன் விளைவுகளும். இவற்றைச் சற்றே விரிவாகப் பார்க்கலாம்.

தமிழனின் இனவுணர்வின்மை வரலாற்றுப் பிரசித்தி பெற்றது. “தமிழன் என்றொரு இனமுண்டுதனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று பாடினார் நாமக்கல் கவிஞர். அவர் குறிப்பிடும் தமிழனின் தனிக்குணம்,என்றைக்குமே அவனுக்கு இனவுணர்வு கிடையாது என்பதுதான்! மனிதனிடம் “இயல்பாகக் காணப் படவேண்டிய இனப்பற்று” அல்லது மற்ற மாநிலத்தவர்களிடம் காணப்படும் இனப் பற்று என்பது இன்றைக்குத் தமிழர்களிடம் இல்லை. இயல்பாக வரவேண்டியதை எப்படிக் கற்றுக்கொடுப்பதுஏன் தமிழர்களிடம் இயல்பாகவே தமிழின்மீது அக்கறை இல்லை?

தமிழ்நாடு ஏறத்தாழ கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கமுதலாக அந்நியக் கலாச்சாரத்தின் ஆட்சிக்குட்பட்டு அதன் ஆற்றல்கள் மங்கி விட்டன. தெலுங்கும் மராட்டியும் கன்னடமும் சமசுகிருதமும் தமிழ்நாட்டின் ஆட்சிமொழிகளாகி அதை மயக்கி விட்டன. இனவுணர்வின்மையின் அடிப்படைக் காரணம் இதுதான்.

ஏறத்தாழ எழுநூறு ஆண்டுகளாக அடிமையாக இருக்கும் ஓரினம் எப்படி ஐயா இனவுணர்வோடு இருக்க முடியும்?முதலில் துருக்கர் ஆட்சிபிறகு விஜயநகர ஆட்சிபிறகு தெலுங்குகன்னட நாயக்கர் ஆட்சிஒரு சில பகுதிகளில் மராட்டியர் ஆட்சிபிறகு டச்சுக்காரபோர்ச்சுகீசியபிரெஞ்சுக்கார ஆட்சிபிறகு ஆங்கிலேயர் ஆட்சி என எழுநூறு ஆண்டுகளாக அடிமையாக இருந்தவன் தமிழன்.

அண்டையிலுள்ள கன்னடநாடோ ஆந்திரமோ கேரளமோ இவ்வளவுநாள் அடிமைப்பட்டிருந்ததில்லை. அவை தமிழகத்தை ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாகவே பலகாலம் இருந்துள்ளன. 1947இல் விடுதலை பெற்ற பிறகாவது தமிழ் இன அக்கறை ஏற்பட்டிருக்கவேண்டும்.  அது ஏற்படாதவாறு “தேசிய” நலனில் அக்கறை காட்டிய காங்கிரஸ் பார்த்துக்கொண்டது. அதற்குப்பிறகு வந்த திராவிடக் கட்சிகள் சொந்த நலத்தையும் சொத்தையும் பெருக்குவதற்குக் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒருபங்கு கூடத் தமிழரைப் பற்றியோ தமிழைப் பற்றியோ காட்டியதில்லை. இப்போது சொல்லவே தேவையில்லைசொந்தநலத்தைப் பெருக்கிக்கொள்வதற்குத்தான் பன்னாட்டுக் குழுமங்களுக்குப் பாவாடை விரிக்கிறார்கள். அதுகூடப் பரவாயில்லைஅவர்களுக் காகத் தமிழகத்தின் விலைமதிப்பற்ற இயற்கையைச் சுரண்டி (கிரானைட் முதல் தண்ணீர் வரை) விற்றுவிடுகிறார்கள்.

இந்தநிலையில் இன்று இருக்கும் தமிழுணர்வு என்பதே எனக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. இதைப் பற்றிக் கவலைப்படுவது மிகை என்றும் தோன்றுகிறது.

வரலாறு என்பது ஆதிக்கத்திலுள்ளவர்கள் புனையும் கட்டுக்கதை என்பார்கள். விடுதலை பெற்ற பிறகு இன்றுவரை பள்ளிகளில் நடத்தப்படும் வரலாறு என்பது உலக நாகரிகத்திற்கோ இந்தியப் பண்பாட்டிற்கோ தமிழனின் கலாச்சாரப் பங்களிப்பை உணர்த்துவதாக அமையவில்லை. வெறும் கேலிக்கூத்தாக இருக்கிறது அது.

இருந்தாலும் தமிழுக்கும் ஒரு தனிக்குணம் இருக்கிறது. எவ்வளவு மோதல்கள்அழிவுக்காரணிகள் வந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் தன்மை. இந்தத் தன்மையால்தான் தமிழ் இன்னும் பிழைத்திருக்கிறது. தமிழ்ச் சமுதாயத்தின் முயற்சியால் அல்ல. தமிழனுக்குப் பொது நலனில் என்றுமே அக்கறை கிடையாது. பல நூற்றாண்டு அடிமைத்தனத்தின் காரணமாக அவனுக்கு எப்போதும் மாற்று நாகரிகம்,மாற்று மொழிமாற்றார் மேல் ஒரு வாய்பிளந்த தாழ்வுணர்ச்சி. அந்தத் தாழ்வுணர்ச்சியின் காரணமாக அன்றுமுதல் இன்றுவரை பிறருக்கு வாழ வழியமைத்துக் கொடுத்தும்தன்னையும் தன் இனத்தையும் தாழ்த்திக் கொண்டும் இருக்கிறான். ஆகவே ஒரு கன்னடனின்அல்லது இந்திக்காரனின் இன வுணர்வு அவனுக்கு எங்கே வரப்போகிறதுஆனால் இதனால் தமிழ் அழிந்துவிடப் போவதில்லை. அதன் “தக்க வைத்துக்கொள்ளும் சக்திஅதைக் காப்பாற்றும்.

அல்லது இப்படிப்பட்ட இனவுணர்வற்ற மக்களின் மொழி அவர்களுடைய சிந்தனையின்மையால்,உணர்வின்மையால் அழிந்துபோகுமானால் அதை எப்படித் தான் காப்பாற்றுவதுஒரு மொழியைக் காப்பாற்றுவது தனிமனித வேலையல்ல. போகட்டுமே! உலகில் எத்தனையோ நாகரிகங்கள் இருந்து காலப்போக்கில் அழிந்து போயிருக்கின்றன. ஓர் இனத்தைச் சேர்ந்த மக்களிடையே வெற்று உலகாயதப்போக்கு சார்ந்த கேளிக்கை மனப்பான்மையும் வெற்றுப் பிழைப்புவாதமும் தோன்றிவிடும் போது அந்த நாகரிகம் அழிந்துதான் தீரும் என்பதை வரலாறு பலமுறை காட்டியிருக் கிறது. இன்று தமிழர்களிடையே இத்தகைய மனப்பான்மைதான் காணப்படுகிறது.

தமிழர்களின் இனவுணர்வின்மைக்குக் காரணமாக நாம் அடுத்த பிரச்சினை யாகிய தமிழ் இலக்கிய உலகு,கல்வித்துறை இரண்டிலும் காணப்படும் நடுத்தரத் தன்மையைப் பற்றி விவாதிக்கலாம். இந்த நடுத்தரத்தன்மை நம்மை மிகவும் அச்சுறுத் துகின்ற ஒன்று. எல்லாநிலைகளிலும் ஆழமான அறிவற்றவர்களும்பிழைப்புவாதி களுமே புகுந்து உயர் தரத்தினை எதிர்க்கவும்மோசமான தரத்திலுள்ள (சிறந்தவை என்ற மகுடம் சூட்டி அவர்களால் பாராட்டப்படுகின்ற) விஷயங்களைப் புகுத்தவும் செய்கிறார்கள். அவர்களுடைய பாசிசம் நம்மைப் பேசவிடாமல் ஆக்கிவிடுகின்றது. இன்றைய கல்வி தனியார் மயமாகிகண்டவரெல்லாம் பல கல்வி நிறுவனங்களை நடத்தத் தொடங்கிய நிலைகல்வியின் தரத்தை மிகவும் மோசமாக்கிவிட்டது.  உதாரணமாக நான் ஆராய்ச்சித் துறையின் மோசமான நிலை பற்றிச் சில ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுரை படித்தபோது (அது தமிழ் நேயத்தில் வெளிவந்தது) அதற்குக் கிடைத்த எதிர்வினைகள் அச்சமூட்டுவனவாக இருந்தன.

பிறமொழிகளில் தரப்படுத்தும் நிறுவனங்கள் நன்கு செயல்படுகின்றன. சான்றாக அலியாஸ் ஃப்ராங்காய் நிறுவனம் வகுத்துள்ள ஃபிரெஞ்சினைத்தான் கற்பிக்கபேசமுடியும். அதன் தரத்தினை நிர்ணயப்படுத்திஇருக்கிறார்கள் அவர்கள். ஆனால் தமிழைத் தரப்படுத்த எந்த நிறுவனம் இருக்கிறதுஎன்னவிதமான தமிழ் தொலைக்காட்சிகளில் (கேள்” களின் தொலைக்காட்சிகள் உட்பட) பயன்படுத்தப் படு கிறதுஏன் இப்படித் தமிழைக் கடித்துத்துப்புகிறார்கள்(இந்திமொழியையோ, உருது வையோ பயன்படுத்தும் தொலைக்காட்சிகளில் இப்படியில்லை என்பது எனக்கு நன்றாகத்தெரியும். இந்தி நான் அறிந்த மொழி என்பதால் இதனை அனுபவபூர்வ மாகச் சொல்லமுடியும்). தமிழைத் தரப்படுத்துவதற்காக ஏற்பட்ட தமிழ்ப் பல்கலைக் கழகம்உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்றவை வெறும் கற்பிக்கும் நிறுவனங் கள் ஆகிவிட்டன.

தூய தமிழ்வாதிகளும் அவர்களால் இயன்ற அளவு தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். தொலை நோக்கற்று வெறும்வார்த்தை அளவிலேயே நின்று சொல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். சொற்களைவிடக் கருத்து முக்கியம் என்பதையும்மொழியின் அமைப்பு முக்கியம் என்பதையும் அவர்களுக்கு யார் உணர்த்துவது

கல்விநிறுவனங்கள் மோசமான வியாபார நிறுவனங்கள் ஆகிவிட்டன. சான்றாகத் தமிழை ஒழுங்காகக் கற்பிக்கும் ஆசிரியர்களும் ஆர்வத்துடன் கற்கும் மாணவர்களும் பெரும்பாலும் இன்று இல்லை. முன்பெல்லாம் இருந்ததைவிட இன்று பி.லிட்எம்.ஏ(தமிழ்) படிக்கும் மாணவர்கள் (தொலைக்கல்விஅஞ்சல்வழிக்கல்வி உட்பட) மிக அதிகம். ஆனால் எல்லாரும் எப்படியாவது ஒரு ஓலை” வாங்கிவிட்டால் “வேலை” கிடைத்துவிடும் என்ற நோக்கில் வருகிறார்களே அன்றி ஆர்வத்தோடும் பற்றோடும் தமிழ் கற்பதற்கு அல்ல. அதனால் பிஎச்.டி படித்தவனுக்குக்கூட பிழை யின்றித் தமிழ் எழுதத் தெரியாது என்று சொல்லும் நிலை இன்றைக்கு.

அடுத்தபடியாகஇன்னொரு பிரச்சினையையும் இங்கு ஆராயலாம். கடந்த ஐம்பதாண்டுகளாக-இன்றுவரை தமிழ் ஆசிரியர்களாக இருப்பவர்கள் கண்டிப்பாக ஏதேனும் ஒருநிலையில் பார்ப்பனர்களை எதிர்கொள்ளவேண்டி வந்திருக்கும் என்ப தில் சந்தேக மில்லை.

நான் யோசித்துப்பார்ப்பதுண்டு: பார்ப்பனர்களுக்கு (பார்ப்பன மனப்பான்மை கொண்ட பிற சாதியினருக்கும்தான்) ஏன் தமிழின்பேரில் இவ்வளவு பகைமையுணர்ச்சிவேறு பல காரணங்கள் இருந்தாலும்ஒரு முக்கியக் காரணம் அவர்களுடைய பிழைப்புவாதம் என்று தோன்றுகிறது. “பிழைப்புக்காக நான் எல்.கே.ஜி. முதலாகவே ஆங்கிலமோ,பிரெஞ்சோஎன்ன மொழியாவது படித்து அமெரிக்காவுக்குப் போவேன்நீ ஏன் அதை எதிர்க்கிறாய்” என்று கேட்கிறது பிழைப்புவாதம். முன்பு சமசுகிருதம் படித்தால் பிழைப்புஅப்போது சமசுகிருதம் தேவபாசை. இப்போது ஆங்கிலம் படித்தால் பிழைப்பு. ஏனென்றால் அது  பன் னாட்டு நிறுவனங்களுடைய உலக” பாசை. “அதைப் படிப்பதை விட்டுத் தமிழ் தமிழ் என்று பேசி என்ன லாபம்முதலில் வயிற்றுப் பிழைப்பைப் பார். பிறகுதான் கலாச் சாரம்மண்ணாங்கட்டி எல்லாம்.”

இன்னொரு காரணம் ஆதிக்கம். முன்பு சமசுகிருதம் என்ற பேரைச்சொல்லிகடவுளின் பேரைச் சொல்லி ஆதிக்கம் செய்ய முடிந்தது. இப்போது அது முடிய வில்லை. ஆகவே ஆதிக்கத்திற்கு உகந்த ஆங்கிலத்தைக் கையிலெடுத்துக் கொண்டார் கள். மேலும் முட்டாள்கள் இருக்கும் வரைதானே ஆதிக்கம் செய்யமுடியும்?இவ்வளவு நூற்றாண்டுகளாகத் தமிழர் அடிமைப்பட்டுக் கிடந்தபோது பார்ப்பனர்களின் நிலை என்னயார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்குக் குடைபிடித்து வாழ்த்துப்பாடித் தங்களை உயர்த்திக் கொண்டது ஒன்றுதான். இப்படித் துதிபாடியே பிழைப்புநடத்திப் பிறர்மீது ஆதிக்கம் செலுத்திவந்த கூட்டத்தை இப்போது உன் ஆதிக்கத்தை விட்டுவிடு” என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளுமாஇன்றைக்கு அதன் பிழைப்புக்கு ஏற்றமாதிரியாகப் பன்னாட்டுக் குழுமங்கள் இருக்கின்றன. “இங்கே இடஒதுக்கீட்டை நீ அமுல்படுத்தினால் என்ன?நாங்கள் அமெரிக்கா போவோம்ஜெர்மனிக்குப் போவோம்ஜப்பானுக்குப் போவோம். அப்படிப் போவதற்கு வாய்ப்பாக உதவுகின்ற அகில இந்திய மேலாண்மைநிறுவனங்கள் (ஐஐஎம்கள்)இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள்(ஐஐடிகள்) போன்றவற்றில் நீ இட ஒதுக்கீடு கொண்டுவந்தால் எதிர்ப் போம். சாதாரண பஞ்சாயத்துப் பள்ளியில் படிப்பவனுக்கு நீ இட ஒதுக்கீடு தந்தால் எங்களுக்குக் கவலையில்லை. அதில் படிப்பவன் எவனும் எங்களுக்குப் போட்டியாக வரப்போவதில்லை. ஆனால் உயர்நிறுவனங்களுக்கு வராதே.”

முட்டாள்களாக மக்களை வைத்திருப்பதற்கு என்ன என்ன வழிமுறைகள் உண்டோ அத்தனையையும் கையாளத் தயாராக இருக்கிறார்கள் இன்றைய பார்ப்பன அறிவுஜீவிகள். உதாரணமாக தலித்துகளோடு சேர்ந்துகொண்டு “நாங்கள் ஒன்றும் தப்பு செய்யவில்லைஎல்லாம் பார்ப்பனர்அல்லாத மேல்சாதிக்காரர்கள்தான் உங்களை ஒடுக்குகிறார்கள்” என்பது போன்ற வாதங்களைச்சொல்லித் தங்கள் நிலை யைத் தக்க வைத்துக்கொள்ளப் பார்க்கிறார்கள்.

தமிழ் நாகரிகம் இருக்கட்டும். கொஞ்சம் உலகத்தைப் பற்றியும் கவலைப்பட்டாக வேண்டும். உலகத்தில்தானே தமிழ்நாடு இருக்கிறதுஉலகத்தை இன்று மிகவும் அச்சுறுத்துகின்ற விஷயங்கள் இரண்டு. ஒன்று சுற்றுச்சூழல் மாசுபாடு. இன்னொன்று மாற்று ஆற்றலுக்கு வழிவகுக்காமல்/ வழியற்ற நிலையில் அணுக்கூடங்களைப் பெருக் கிச்செல்வது. அறிவுஜீவிகள் உட்பட எவரும் இவையிரண்டையும் தீவிரமான பிரச்சி னைகளாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு தனிப்போராட்டம் கூடங்குளத்தில் தொடர்ந்து ஓராண்டுக்குமேல் நிகழ்ந்துவந்தபோதும் தமிழக அறிவுஜீவிகள் அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்திய அளவில் அதன் செல்வாக்கு பரவவில்லை. கட்சிகளோ அவதூறு செய்தன. இம்மாதிரிச் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் இன்னும் ஐம்பது வருடங்களேனும் உலகமே பிழைத்திருக்குமாஅல்லது அழிந்துவிடுமா என்னும் கேள்விகள் எழுந்துள்ளன. முதலில் உலகத்தைக் காப்பாற்றுங்கள்பிறகு தமிழ் நாகரிகத்தைப் பிறர் ஏற்றுக்கொள்வதைப் பற்றிக் கவலைப்படலாம்.

அமெரிக்காவின் ஆதிக்கத்தை,

அதற்குச் சார்பான பன்னாட்டுக்குழுமங்களின் ஆதிக்கத்தை,

அதற்குச் சார்பான உலகமயமாக்கல் கொள்கையை,

அதற்குச் சார்பான பார்ப்பனியத்தை,

அதற்குச் சார்பான இன்றைய இந்திய-தமிழக அரசியல்வாதிகளை,

அவர்களது சாதிபண அடிப்படையிலான அரசியலை,

எதைவேண்டுமானாலும் இனாமாக” அல்லது “மலிவுவிலையில்” வழங்கி ஆட்சியைப் பிடிக்கும் அவர்களது பேர அரசியலை-

இவற்றையெல்லாம் முதலில் எப்படி எதிர்த்து வீழ்த்துவது என்று யோசியுங்கள். பின்னால் தன்னால் நல்லது நடக்கும்.


திராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே

konjam-manam2-240x300

தேர்தல்கள் முடிந்துவிட்டன. இனி தமிழ்நாட்டின் கட்சிகள் பற்றிக் கொஞ்சம் தைரியமாகப்பேச முடியும்.முதன் முதலில் நான் பெங்களூர் சென்றது 1964இல். நான் பி.யூ.சி. படித்தபோது ஓர் அறிவியல் கருத்தரங்கத்திற்காக அப்போது தி.மு.க. ஆட்சிக்கு வரவில்லை, ஆனாலும் அந்தப் பெயரைச் சொன்னாலே ஏதோ கெட்ட வார்த்தையைச் சொல்வதுபோலப் பார்த்தார்கள் பெங்களூரில். குறிப்பாகக் கல்லூரிபல்கலைக்கழகம் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்கன்னடர்கள். ஆனால் கல்லூரிகளில் அப்போது தமிழ்நாட்டில் தி.மு.க. அலை வீசிக்கொண்டிருந்தது. அதனால்தான் 1967இல் மிக எளிதாக தி.மு.க. காங்கிரஸை வீழ்த்திவிட்டு ஆட்சிக்கு வந்தது.

முழு இந்தியாவிலும் தமிழ்நாட்டில்தான் திராவிடம் என்ற பெயரைத் தாங்கிய கட்சிகள் இருக்கின்றன. ஆந்திரத்தில் இல்லைகேரளத்தில் இல்லைகருநாடகத்திலும் இல்லை. திராவிடம் என்ற பெயரைக்கூட அங்கெல்லாம் உச்சரிக்க முடியாதுஅவ்வளவு வெறுக்கிறார்கள். (உடனே யாரும் தயவுசெய்து திராவிடர் என்ற குடும்பப் பெயரை எடுத்துக்காட்ட வேண்டாம்அதற்கெல்லாம் தனி வரலாறு இருக்கிறது.)

ஒருகாலத்தில்கால்டுவெல் ஆய்வுசெய்து நூல் வெளியிட்ட காலத்தில்இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் நிகழ்ந்த காலத்தில்உருவான கருத்துதான் திராவிடம் என்பது. அது ஒரு தனி மொழியினத்தைக் குறிக்கப் பயன்பட்டது. எந்தக் காலத்திலும் அச்சொல் ஓர் இனத்தையோநாட்டையோநாட்டு மக்களையோ குறிக்கப் பயன்பட்டதில்லை.

பழங்காலத்தில்தமிழ் என்ற சொல்லை உச்சரிக்க முடியாத வடநாட்டவர்கள்சமஸ்கிருத மொழியைக் கையாண்டவர்கள்தமிழை திராவிடம் என்ற சொல்லால் குறித்தார்கள். ஆங்கிலேயன் குமரி என்று உச்சரிக்க முடியாமல் காமரூன் என்று ஆக்கியமாதிரி. உதாரணமாகதமிழ்க்குழந்தை என்று ஞானசம்பந்தரைக் குறிக்க வந்த காலடி ஆதி சங்கராச்சாரியார்திராவிட சிசு என்றார். ஆக தமிழனுக்கு சமஸ்கிருத மொழிக்காரன் வைத்த பெயர் திராவிடன்.

இராமசாமிப் பெரியார்காங்கிரஸிலிருந்து வெளிவந்து 1925இல் திராவிடக் கட்சியைத் தொடங்கினார். ஏறத்தாழ அது நீதிக்கட்சிதான். நீதிக்கட்சிசாதிக்கேற்ப இட ஒதுக்கீடு கேட்க மட்டுமே வந்த கட்சி. அதற்கும் திராவிடத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஒடுக்கப்பட்டவர்கள்ஏழைகள் முன்னேற்றத்திலும் அதற்கு அக்கறை இல்லை. அதில் இருந்தவர்கள் எல்லாம் பார்ப்பனர் அல்லாத பெருந்தனக் காரர்கள்.

திராவிடம் என்ற சொல் தமிழ்நாட்டைத்தான் குறிக்கும்திராவிடன் என்ற சொல் தமிழனைத்தான் குறிக்கும் என்றால் பெரியார் ஏன் திராவிடக் கட்சி தொடங்கவேண்டும்தமிழன் கட்சி என்றே தொடங்கியிருக்கலாமே?அண்ணாதுரை ஏன் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கவேண்டும்தமிழன் முன்னேற்றக் கழகமே தொடங்கியிருக்கலாமே? (பின்னால் திராவிடம் என்ற பெயரைப் போட்டுக் கொண்ட கட்சிகளை விட்டுவிடுங்கள். பழக்கதோஷம் என்றே இப்போதைக்கு வைத்துக்கொள்வோம்.) அல்லது பெரியாருக்கு மிகப் பிடித்தமான சுயமரியாதை என்ற சொல்லை வைத்து சுயமரியாதைக் கட்சி என்றே தொடங்கியிருக்கலாமேஐம்பதுகள் அறுபதுகளில்கூட பெரியார்-அண்ணா கட்சிக்காரர்களை சு.ம. ஆட்கள் என்றுதான் காங்கிரஸ்காரர்கள் குறிப்பிடுவது வழக்கம்.

அதனால்தான் “திண்ணையில் படுத்தேனும் திராவிடநாடு வாங்குவோம்” என்று சொன்ன அண்ணாதுரையால் அந்தக் கோரிக்கையை எந்த வருத்தமும இன்றி உடனே கைவிடமுடிந்தது. திராவிடநாடு என்பது தமிழ்நாடுதான் என்பது அவருக்கு மிக நன்றாகத் தெரியும். அதைத்தான் 1956இல் வாங்கியாயிற்றேஇன்னும் எந்த திராவிட நாட்டைப் போய் வாங்குவதுபெங்களூரைக் கொடு என்றால் கன்னடர்கள் விடு வார்களாஅல்லது தமிழகத்தின் ஒருபகுதியாகவே சங்ககாலம் முதல் இருந்த திருப் பதியைக் கொடு என்றால் ஆந்திரர்கள்தான் விட்டுவிடுவார்களாஅண்ணாதுரையின் முக்கியமான ஏமாற்று வேலைதிராவிட நாடு என்ற கட்டுக்கதை.

பெரியார்மிகவும் சூட்சுமமாகத்தான் பெயர் வைத்தார். அவருக்குத் தமிழ் மீதோபிற திராவிட மொழிகள்மீதோ பெரிய அபிமானம் ஒன்றும் இல்லை. தமிழ்க்கட்சிஅல்லது தமிழன் கட்சி என்று பெயர் வைத்தால்ஏ.டி. பன்னீர் செல்வம் வேண்டுமானால் அதில் சேருவார்அவர் பச்சையான தமிழர். பிட்டி தியாகராசரோ,  பனகல் ராஜாவோ,டி.எம். நாயரோ அதில் சேருவார்களாஅந்தக் காலத்தில் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டதில் இன்றுள்ள கேரளத்தின் சில பகுதிகள்கன்னட நாட்டின் மைசூர் வரையிலான பகுதிகள்ஆந்திரத்தின் சில பகுதிகள் எல்லாம் அடங்கியிருந்தன. ஆகஅங்கெல்லாம் இருந்தவர்களை ஒன்று சேர்க்கத்தான் என்று வைத்துக்கொள்வோமேதிராவிட என்ற சொல்லைக் கையாளவேண்டிய அவசியம் பெரியாருக்கு ஏற்பட்டது.

சரிவைத்தது வைத்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகுமொழிவாரி மாநிலங்கள் பிரியும் நிலை ஏற்பட்ட பிறகுமொழியுணர்வு இந்தியாவில் எங்கும் அடிநீரோட்டமாக ஆனபோதாவது திராவிட என்ற சொல்லை விட்டுவிட்டு தமிழன் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கவேண்டாமா?

அங்குதான் அண்ணாதுரையின் புத்தி மட்டுமல்லம.தி.மு.க.தே.மு.தி.க. என இன்றுள்ள கட்சிகள் வரையிலும் குயுக்தி ஆட்சி செய்கிறது. தமிழகத்தில்வீட்டுக்கு வெளியே தமிழ் பேசிக்கொண்டுஆனால் வீட்டுக்குள் தெலுங்கோ கன்னடமோ மலையாளமோ பேசிக்கொண்டுமக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தவந்தாலும் தங்களைக் கன்னடர்தெலுங்கர்மலையாளி என்றே குறிப்பிட்டுக்கொண்டு வாழும் சாதிகள் அநேகம். தமிழ்நாட்டின் அசலான சாதிகளைவிடஇவர்களுக்குத்தான் பிற்பட்ட வகுப்பினருக்கானஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான சலுகைகளும் மிகுதியா கக் கிடைக்கின்றன என்பதைத் தமிழ்நாட்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பதிவேடுகளைப் பார்ப்பவர்கள் மிக எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும்.

தமிழன் கட்சி என்றால் இவர்கள் யாரும் அதில் சேர மாட்டார்கள். இவர்களை ஒதுக்கவும் முடியாது. இன்றும் ஒக்கலிகர்களும்பலிஜாக்களும்நாயுடுக்களும். ஊர்த்தலைவர்களாகவும் பெரும்பான்மையாகவும் இருக்கும் கிராமங்கள் ஏராளம். அதனால்தான் தமிழன் முன்னேற்றத்தைக் கைவிட்டுஇவர்கள் எல்லோரையும் திராவிடராக ஒன்றுசேர்த்து முன்னேற்ற வேண்டிய கட்டாயம் பெரியாருக்கும் அண்ணாதுரைக்கும் ஏற்பட்டது. இவர்களுக்குப் பின்னால் அண்ணா பெயரை வைத்துத் திராவிடக்கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆருக்கும் திராவிடத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர் இராமச்சந்திர மேனோன். பால நாடக சபாக்களில் நடிக்க வந்து பிறகு திரைப்படத்தின் மூலமாகத் தன்னை நிலைநாட்டிக்கொண்டவர். அவருக்குப்பின் கட்சித்தலைவராக வந்தவர் தம்மைச் சட்டசபையிலேயே ஓர் உயர்ந்த சாதி என்று அறிவித்துக்கொண்டவர். பிற திராவிட என்று பெயர் சூடும் கட்சிகளின் தலைவர்களையே பாருங்கள்யார் அவர்கள்எந்தெந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புரியும்.

ஆகதிராவிட என்ற கட்சிச்சொல்லின் வரலாற்றைப் பார்த்தால்தமிழர்களை மேம்படுத்தாமல்தமிழ்நாட்டில் வசிக்கும்குறிப்பாக ஆதிக்கம் செய்யும்தெலுங்குகன்னடமலையாள சாதிக்காரர்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட சொல் என்பது நன்றாகப் புரிகிறது. இது பிடிக்காததனால்தான் ம.பொ.சியோஆதித்த னாரோஏன் ஈவெராவின் உறவினரான ஈவெகி சம்பத்தோ கூட திராவிட என்ற சொல்லைத் தங்கள் கட்சிகளுக்கு வைக்காமல் தமிழ் அல்லது தமிழர் என்ற சொல்லைச் சேர்த்துக் கட்சிப்பெயர் வைத்தார்கள். ஆனால் இன்று யாருக்கும் அந்தத் துணிச்சல் இல்லாமல் போனது தமிழனின் இளிச்சவாய்த்தனம். தமிழர்கள் தமிழ் நாட்டில் என்றைக்குமே சிறுபான்மையினராகத்தான் ஆக்கப்படுவார்கள்மதிக்கப் படுவார்கள் என்பதற்கும் அடையாளம்.