கேள்வி (விவேக்): வணக்கம் மாமா, ஆங்கில உரையாடல்களில் ஒருவர், well!, how are you? என்று பேசுகிறார் என்றால், ‘well’ என்ற சொல்லை தமிழில் எப்படி மொழிப்பெயர்ப்பு செய்வது?
பதில் : Well, your question is not correct. In speech, each and every language has its own customs and we need not/ should not translate them.
1) well என்ற சொல் அது ஒரு உரையாடலின் தொடர்ச்சியாக வருகிறது என்பதைக் காட்டுகிறது. கட்டாயம் மொழிபெயர்த்தாக வேண்டுமென்றால், ‘சரி, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்கலாம். (இங்கும் சரி… என்பது உரையாடலின் தொடர்ச்சியே.)
2) ஒரு ஜோக் உண்டு. தமிழில் “நீ உன் குடும்பத்தில் எத்தனையாவது பிள்ளை?” என்று கேட்பதை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க லாம்? how manyieth issue are you in your family என்றா? அதனால் தான் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பேச்சு மரபு உண்டு என்றேன்.
அவரவர் மொழியின் வழக்காற்றை அந்தந்த மொழியில் பயன்படுத்த வேண்டுமே அன்றி, மறறொரு மொழியின் வழக்காற்றை அல்ல. அதனால்தான் கேள்வி தவறு என்றேன்.
மேலும் ஒரு தெளிவாக்கம்.
3) மொழிப்பெயர்ப்பு அல்ல, மொழிபெயர்ப்பு-தான்.
வல்லினம் மிகும் இடங்களுக்கு வல்லின ஒற்று போடாமல் விடுவதை விட, தேவையற்ற இடங்களில் போடுவது மிகக் கொடுமையானது. இப்போதெல்லாம் தவறான வழக்குகளை யாராவது கொண்டுவந்துவிட, அதை அப்படியே பின்பற்றிவிடுகிறார்கள். உதாரணமாக, புகைப்பிடிப்பது. [ஓரெழுத்துச் சொல் (கைப் பிள்ளை) லுக்குப் பின், இரண்டாம் வேற்றுமையில் ஐ உருபு-க்குப் பின் (அதைச் செய்வது) வல்லெழுத்து வரலாம். மற்ற இடங்களில் வரலாகாது.]
இப்படித்தான் ஒரு கூமுட்டை நடிகன் அருணாசலம் என்ற சொல்லை “அருணாச்சலம்” என்று எழுதப்போக அதையே பின்பற்றுகிறார்கள் மற்ற கூமுட்டைகள். இப்படித்தான் தமிழ் கெடுகிறது. (ஆனால் சினிமாத்துறையில் இருந்த பஞ்சு அருணாசலம், இறுதிவரை தன் பெயரை அருணாசலம் என்றுதான் எழுதிவந்தார் என்பதை கவனிக்கவும், அந்தக் கூமுட்டை நடிகனுக்காகத் தன் பெயரை அவர் தவறாக எழுதவில்லை).