பாவேந்தர் பாரதிதாசன் வழங்கிய புதுநெறி ஆத்திசூடி
- அனைவரும் உறவினர்
- ஆட்சியைப் பொதுமைசெய்
- இசைமொழி மேலதே
- ஈதல் இன்பம்
- உடைமை பொதுவே
- ஊன்றுளம் ஊறும்
- எழுது புதியநூல்
- ஏடு பெருக்கு
- ஐந்தொழிற்கு இறைநீ
- ஒற்றுமை அமைதி
- ஓவியம் பயில்
- ஔவியம் பெருநோய்
- கல்லார் நலிவர்
- காற்றினைத் தூய்மைசெய்
- கிழிப்பொறி பெருக்கு
- கீழ்மனம் உயர்வுசெய்
- குள்ள நினைவுதீர்
- கூன்நடை பயிலேல்
- கெடுநினைவு அகற்று
- கேட்டு விடையிறு
- கைம்மை அகற்று
- கொடுத்தோன் பறித்தோன்
- கோனாட்சி வீழ்த்து
- சதுர்பிறர்க்கு உழைத்தல்
- சாதல் இறுதி
- சிறார்நலம் தேடு
- சீர்பெறு செயலால்
- சுவைஉணர் திறங்கொள்
- சூழ்நிலை நோக்கு
- செல்வம் நுண்ணறிவாம்
- சேய்மை மாற்று
- சைகையோடு ஆடல்சேர்
- சொற்பெருக்கு ஆற்றல் கொள்
- சோர்வு நீக்கு
- தளையினைக் களைந்து வாழ்
- தாழ்வு அடிமைநிலை
- திருஎனல் உழுபயன்
- தீங்கனி வகைவிளை
- துன்பம் இன்பத்தின்வேர்
- தூயநீ ராடு
- தெருவெலாம் மரம்வளர்
- தேன்எனப் பாடு
- தைக்க இனிது உரை
- தொன்மை மாற்று
- தோல்வி ஊக்கம்தரும்
- நடுங்கல் அறியாமை
- நால்வகைப் பிறவிபொய்
- நினைவினில் தெளிவுகொள்
- நீணிலம் உன்இல்லம்
- நுண்ணிதின் உண்மைதேர்
- நூலும் புளுகும்
- நெடுவான் உலவு
- நேர்பயில் ஆழ்கடல்
- நைந்தார்க்கு உதவிசெய்
- நொடிதோறும் புதுமைசேர்
- நோய் தீ யொழுக்கம்
- பல்கலை நிறுவு
- பார்ப்பு பொதுப்பகை
- பிஞ்சுபழுக் காது
- பீடு தன்மானம்
- புதுச்சுவை உணவுகாண்
- பூப்பின் மணங்கொள்
- பெண்ணோடு ஆண்நிகர்
- பேய்இலை மதம்அலால்
- பைந்தமிழ் முதல்மொழி
- பொழுதென இரவுகாண்
- போர்த்தொழில் பழகு
- மறைஎனல் சூழ்ச்சி
- மாறுவது இயற்கை
- மிதியடியோடு நட
- மீச்செலவு தவிர்
- முகச்சரக்காய் வாழ்
- மூப்பினுக்கு இடம்கொடேல்
- மெய்கழிவு அயற்கின்னா
- மேலை உன் பெயர்பொறி
- மையம் பாய்தல் தீர்
- மொடுமாற்றுப் பொது இன்னா
- மோத்தலில் கூர்மை கொள்
- வறுமை ஏமாப்பு
- வாழாட்கு வாழ்வு சேர்
- விடுதலை உயிக்குயிர்
- வீடுஎனல் சாதல்
- வெறும்பேச்சு பேசேல்
- வேளையோடு ஆரஉண்
- வையம் வாழ வாழ்
நன்றி-பாவேந்தர்பாரதிதாசன் பேரவை