நாள் என ஒன்றுபோல் காட்டி…

இன்று நான் அறுபத்தெட்டு ஆண்டுகளை முடித்து அறுபத்தொன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாள். வழக்கமாக எனது பிறந்தநாளில் என் மனத்தில் தோன்றும் கவிதையினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பாளையாம் தன்மை செத்தும்  பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்புமாகி
நாளும் நாள் சாகின்றேமால் நமக்கு நாம் அழாதது என்னே.

நமக்கு உண்மையில் தெரிந்த கால அளவு நாள்தான். (ஒரு பகல், ஓர் இரவு). வாரம், மாதம், ஆண்டு எல்லாம் நாமாக வைத்துக் கொண்ட அளவுகள். அதனால்தான் வள்ளுவரும் நாள் என ஒன்று போல் காட்டி…என்றார். நாட்கள் செல்கின்றன. வாழ்நாள் கழிகின்றது. எல்லா உயிர்களுக்கும் ஒரே விதிதான். வந்ததுபோலப் போய்ச் சேர்தல். இதற்குள்தான் நமது எல்லா ஆட்டமும். 

தினம்-ஒரு-செய்தி