சில அறிவுரைகள்

சில அறிவுரைகள்-கொரொனாவின் பின்னணியில்

இன்னும் சில நாட்களில் ஊரடங்கு அடங்கி விடும். இன்றைய தலைமுறைக்கு இது ஒரு அழியாப் பாடம்.

1 ஊரடங்கு முடிந்து நீங்கள் நிச்சயம் வேலைக்கு செல்ல வேண்டும், குடும்பத்துக்காக வருமானம் ஈட்ட வேண்டும். இன்று முதல் ஒரு வருடத்திற்குச் சிக்கனமாக இருங்கள். தேவையற்றவைகளுக்குச் செலவு செய்ய வேண்டாம்.

2 கூடியவரையில் சிறு வியாபாரிகள் கடையில் பொருள்களை வாங்குங்கள். ‘மால்’ மற்றும் சூப்பர்மார்கெட்டுகளைத் தவிருங்கள்.

3 Amazon /flip cart போன்ற online நிறுவனங்களை ஒரு வருடத்திற்குத் தவிர்த்தால் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.

4 நகைக் கடைகளைப் புறக்கணியுங்கள். இன்று தங்கம் ஒரு கிராம் வாங்க வேண்டும் என்றால் 5000 ரூபாய் அளவில் உள்ளது. நீங்கள் நகைக் கடைகளை ஆக்கிரமித்தால் லாபம் நகைக் கடைக்காரர்களுக்கே. ஒரு வருடத்திற்கு நீங்கள் நகைகள் வாங்கவில்லை என்றால் ஊரில் பாதி நகைக்கடைகள் காணாமல் போய் விடும்.

5 திரை அரங்குகளைப் புறக்கணியுங்கள். எந்த ஹீரோவும் நமக்கு ஒரு சிறு நன்மை கூடச் செய்தவனல்ல. மாறாக ஹீரோ ஒர்ஷிப்பை நடைமுறை ஆக்கியவன்கள். அதிகக் காசு கொடுத்துப் பிடித்த நாயகன் படத்தை முதல் ஷோ பார்ப்பதினால் எந்தக் குடும்பத்திலும் மங்கலம் உண்டாகப் போவதில்லை. மூன்று மாதங்கள் பொறுங்கள். “உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக, திரைக்கு வந்த சில நாட்களே ஆன படம்” என்று தொலைக்காட்சிகளில் அதை நீங்கள் காணலாம்.

6 குடிமகன்களுக்கு ஒரு வார்த்தை. குடியைத் தற்காலிகமாகவேனும் நிறுத்திய இந்த ஊரடங்கிற்கு நன்றி சொல்லுங்கள். படிப்படியாகக் குடியை நிறுத்தி உங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுங்கள். 

7. வாகனம் மற்றும் கார் வாங்குவதை அறவே தவிருங்கள்.

8. 35000 ரூபாய் பெறுமான AC இன்று 10000 ரூபாய்க்கு விற்பனை என்று கூவிக் கூவி விற்பார்கள்.  இதனால் நஷ்டம் நமக்கே. Quality Compromise strategy will be adopted. சீனாவில் இருந்து வரும் மொபைல் போன்ற வற்றை online shop மூலமாக ஏகப்பட்ட discount கொடுத்து விற்பார்கள். ஒரு வருடம் மொபைல் வாங்க வில்லை என்றால் நமது குடி முழுகிப் போய்விடாது.

9 வாழ்க்கைக்கு ஒரு பொருள் தேவை என்கிற நிலை வந்தால் மட்டுமே அந்தப் பொருளை வாங்குங்கள். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப் பட்டு நிரந்தரக் கடன்காரனாக மாறி விடாதீர்கள்.

10 கடன் அட்டை (Credit Card )உபயோகத்தைக் கூடிய அளவு தவிருங்கள்.

11 குழந்தைகளுக்கு ஒரு சொல். தயவு செய்து உங்கள் பெற்றோர்களை வருத்தாதீர்கள். “என் நண்பன் அதை வைத்திருக்கிறான் இதை வைத்திருக்கிறான் அதே போல எனக்கும் வேண்டும்” என்று அடம் பிடிக்காதீர்கள். விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும்.

இன்னும் ஒரு ஆண்டு நமக்குச் சோதனையான காலம். அதைக் கடந்து விட்டால் இன்று புறநகரில் 70 லட்சம் விற்கும் வீடு 50 லட்சத்திற்கு வரக்கூடும். பிறகு வாங்கிக் கொள்ளலாம். ஒரு வருடப் பொறுமை உங்களுக்கு 20 லட்சம் வரை சேமிப்பிற்கு வழி வகுக்கும். அதே போலத்தான் தங்கம் விலையும். நீங்கள் ஒரு வருடம் வாங்க வில்லை என்றால் அடுத்த வருடம் பாதி விலையில் உங்களுக்குக் கிடைக்கக்கூடும். தயவு செய்து காத்திருங்கள்.

ஏமாற்றாதே ஏமாறாதே என்கிற வரிகள் எப்போதும் நமக்குத் தேவை. சிக்கனமும் சேமிப்பும் நமக்குச் சோறு போடும். ஊதாரித்தனம் நமது வம்சத்தை அழித்து விடும்.

கலியுகத்தின் கொடுமைகளை இன்னும் ஒரு வருடம் நாம் கண்முன்னே காணப் போகிறோம். ஜாக்கிரதை. விலை உயர்ந்த நகைகளைப் போட்டுக் கொண்டு சாலையில் செல்ல வேண்டாம். ஒரு ரூபாய்க்காகவும் கொலை செய்யும் கயவர்கள் உண்டு இந்த நாட்டில்…(யா‍ரோ கூறிய அறிவுரைகள்)

சமூகம்