ஏழை ஜெயலலிதா போய் ஒரு வருடம் ஆகி விட்டது.
அவரால் தன்னுடன் எதையுமே எடுத்துச் செல்ல முடியவில்லை.
ஆம். சர்வ வல்லமை பொருந்திய அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்.
இன்று வெறும் நமது நினைவுகளில் மட்டுமே இருக்கிறார்.
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
என்று ஒரு ஆறடி மண்ணில் புதைக்கப்பட்டு மறைந்து விட்டார்.
எந்த வழியிலோ சம்பாதித்த செல்வங்களை யாரோ அனுபவிப்பதற்காக விட்டு விட்டுச்சென்று விட்டார்.
[ 1197 ஏக்கர் நிலம் திருநெல்வேலியில்,
200 ஏக்கர் வாலாஜாப்பேட்டையில்,
100 ஏக்கர் ஊத்துக்கோட்டையில்,
25 ஏக்கர் சிறுதாவூரில்,
300 ஏக்கர் காஞ்சீபுரத்தில்,
14.5 ஏக்கர் திராட்சைப் தோட்டம் – ஜீடிமெட்லா (ஆந்திராவில்),
1600 ஏக்கர் தேயிலைத் தோட்டம்
ஒரு பங்களாவுடன் கொடநாடு, நீலகிரி மலையில்.
இவை தவிர சென்னையில் போயஸ் தோட்டத்தில் 24,000 சதுர அடியில் கட்டப்பட்ட 100 கோடி மதிப்புள்ள (வேதா நிலையம்) பங்களா,
4 வணிக வளாகங்கள்,
800 கிலோ வெள்ளி,
28 கிலோ தங்கம்,
750 ஜோடி காலணிகள்,
10,500 புடவைகள்,
91 விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள்,
இவை தவிர பல வாகனங்கள், சொகுசு கார்கள்.
(இந்தக் கணக்கில் பினாமி சொத்துக்கள் சேரவில்லை.) ]
யாராலுமே தடுத்து நிறுத்த முடியாத ஒரு பயணம் நம் எல்லோருக்கும் காத்திருக்கிறது.
இந்த வாழ்க்கைப் பயணத்தில் நாம் வெறும் பயணிகள் தான். அவரவர் தாம் எங்கே இறங்க வேண்டுமோ அங்கே இறங்கித்தான் ஆகவேண்டும். ஆகையால்:
அகந்தையை ஒழித்திடுவோம், நாம் யார் என்பதை உணர முயற்சி செய்வோம், வாழும் கடைசி நிமிடம் வரை நல்லவர்களாக அடுத்தவர்களை மதித்துப் பயனுற வாழ்வோம்.