ஆசிரியர்- சர்க்கரை என்ற சொல்லை வைத்து ஒரு வாக்கியம் சொல்.
மாணவன்- நான் காலையில் காப்பி குடித்தேன்.
ஆசிரியர்- நீ சொன்ன வாக்கியத்தில் சர்க்கரை வரவில்லையே?
மாணவன்- அதுதான் காப்பியில் கரைந்துவிட்டதே சார்.
ஆசிரியர்- இன்று நமது பாடத்தின் தலைப்பு ஒளிச்சேர்க்கை.
ஆசிரியர் (மீண்டும்)- ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?
மாணவன்- ஒளிச்சேர்க்கை என்பது இன்று நமது பாடத்தின் தலைப்பு சார்.
ஆசிரியர்- “ஜான் மாம்பழத்தைப் பறிக்க வருகிறான்”. மாணவர்களே, யாராவது மாம்பழம் என்று தொடங்கி இந்த வாக்கியத்தை மாற்றியமைத்துச் சொல்லுங்கள்.
மாணவன்- மாம்பழமே, ஜான் உன்னைப் பறிக்க வருகிறான்.
ஆசிரியர்- கொசுக்களை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கிறீர்கள்?
மாணவன்- நாங்கள் அழைப்பதில்லை சார், அவை தானாகவே வருகின்றன.
ஆங்கில ஆசிரியர்- What is the nation that people hate most?
மாணவன்- Exami-NATION, Sir.
ஆசிரியர்- நாம் நமது பள்ளியைச் சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?
மாணவன்- நாம் எல்லாரும் வீட்டிலேயே இருந்துவிடலாம் சார், பள்ளி சுத்தமாக இருக்கும்.
ஆசிரியர்- நமது நாடு ஒருகாலத்தில் ஊழலற்றதாக மாறும். இது என்ன காலம்?
மாணவன்- நடக்க-இயலாத எதிர்காலம் சார்.