சாதி என்பது என்ன? ஒருவன் தன் பெற்றோரைத் தான் தேர்ந்தெடுக்க முடியாத இயற்கை நிலைக்காக அவனைத் தண்டிப்பதுதான். ஆகவே சாதியமைப்புகள் கூடாது, அவற்றை நீக்கவேண்டும் என்று எழுதினேன். நண்பர்கள் என்னிடம் கலைத்தன்மை இல்லை என்றனர். நான் எதிர்பபாளன், ஆகவே தண்டிக்கப்பட வேண்டியவன் என்றது அரசாங்கம். ஆனால்
பெற்றோரை
நான் தேர்ந்தெடுக்காததால்
என்னைச்
சேரியில் தள்ளிவிட்டார்கள்
என்று நண்பன் ஒருவன் அதையே மாற்றி எழுதினான். அவனைக் கவிஞன் என்று போற்றினார்கள். அரசாங்கம் விருது அளித்து கவுரவித்தது.